ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

OMG... குவியல் குவியலாக தொங்கும் பாம்புகள்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

OMG... குவியல் குவியலாக தொங்கும் பாம்புகள்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | Snake World என்ற இனஸ்டாகிராம் பக்கத்தில் இதுப்போன்ற பல பாம்புகள் குறித்த வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பாம்புகள் பொதுவாக காடுகள், புதர்கள் என தனக்கென்ற இரைகள் கிடைக்கும் இடத்தில் அதிகமாக காணப்படுவது வழக்கம். சில நேரங்களில் உணவுகள் மற்றும் தங்குமிடத்திற்காக தவறுதலாக மனிதர்கள் இருப்பிடத்திற்கு வருவது உண்டு. பாம்புகள் பொதுவாக விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும் சில பாம்புகளுக்கு விஷத்தன்மை இருக்காது.

  பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை பார்த்தால் அலறி அடித்து ஓடுவார், சிலரோ பாம்பு என்ற சொல்லை கேட்டாலே அலறுவார்கள். ஒரு பாம்பை பார்த்தாலே நமக்கு அடிவயிறு கலங்கி விடும். அப்படி இருக்க கொத்து கொத்தாக பாம்புகள் இருப்பதை பார்த்தாால் எப்படி இருக்கும். அப்படி ஒரு வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பயமுறுத்தி வருகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)  இன்ஸ்டாகிராமில் Snake World என்ற பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மரத்தில் பாம்புகள் கொத்து கொத்தாக தொங்குகின்றன. ஒரு பாம்பின் மீது மற்றொரு பாம்பு ஊர்ந்து செல்கிறது. அதில் சில சண்டையிடுவது போல சீறுகின்றன. இந்த வீடியோவை பார்க்க தனி தைரியம் வேண்டுமென்றே இருக்கிறது.

  Snake World என்ற இனஸ்டாகிராம் பக்கத்தில் இதுப்போன்ற பல பாம்புகள் குறித்த வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது. பாம்புகள் குறித்து மக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது. விஷத்தன்மை கொண்டிருந்தாலும் பாம்பை நாம் எந்த வித தொந்தரவும் செய்யாத வரை அதுவும் நம் மீது நஞ்சை கக்காமல் இருக்கும்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trending Video, Viral Video