• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பெங்களூரில் கிரிஷி மேளாவில் ரூ.1 கோடிக்கு விற்பனையான காளை மாடு - அப்படி என்ன ஸ்பெஷல்?

பெங்களூரில் கிரிஷி மேளாவில் ரூ.1 கோடிக்கு விற்பனையான காளை மாடு - அப்படி என்ன ஸ்பெஷல்?

ரூ.1 கோடிக்கு விற்பனையான காளை மாடு

ரூ.1 கோடிக்கு விற்பனையான காளை மாடு

இதன் விந்தணுவிற்கு தற்போது பெரிய அளவில் தட்டுப்பாடு உள்ளது. எனவே தான் இந்த காளை மாட்டின் விலை 1 கோடி ரூபாயாக உள்ளது.

  • Share this:
சில பழமையான பொருட்கள் எப்போதும் அதிக விலைக்கு ஏலம் போவது வழக்கம். நம் வீடுகளில் இருக்கும் பல பழைய பொருட்கள் நாம் நினைப்பதை விடவும் அதிக விலைக்கு போகக் கூடும். அது சாதாரண பொருளாக இருக்கலாம்; அல்லது நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியாக கூட இருக்கலாம். இப்படியொரு அதிசய நிகழ்வு தான் பெங்களூரில் நடந்துள்ளது. பொதுவாக ஆடு மாடுகளை சந்தைக்கு எடுத்து சென்று ஏலம் விட்டு வாங்குவது வழக்கமான ஒன்றாக பல ஊர்களில் இன்றும் நடந்து வருகிறது.

அந்த வகையில் பெங்களூரில் சமீபத்தில் கிரிஷி மேளா என்கிற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் ஏராளமான மாடுகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்தினர். அங்கு நடந்த மேளாவில் ஒரு காளை மாட்டின் மீது மட்டும் எல்லோரின் கவனமும் திரும்பியது. இதற்கு காரணம் அந்த காளையின் விலை ரூ.1 கோடி என்பதால் தான்.

இப்படியொரு அதிக தொகையை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த காளை மாட்டின் அதிக விலைக்கு காரணம் என்னவென்று பலரும் குழம்பி போயிருந்தனர். அப்போது தான் அதன் உரிமையாளரான போரகவ்டா இதைப் பற்றி தெளிவாக விளக்கினார். இந்த காளை மாட்டின் பெயர் கிருஷ்ணா என்பதாகும். இது பழமையான காளை மாட்டின் வகையான ஹல்லிகர் இனத்தை சேர்ந்தது. இந்த "காளை இனம் தான் எல்லா காளை வகைக்கும் தாய்" என்று அவர் குறிப்பிட்டார்.

Also read... கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா? இந்த கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது!

இதன் விந்தணுவிற்கு தற்போது பெரிய அளவில் தட்டுப்பாடு உள்ளது. எனவே தான் இந்த காளை மாட்டின் விலை 1 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் இதன் விந்தணுவிற்கு 1 டோஸ் 1000 ரூபாயிற்கு விற்கிறோம் என்று போரகவ்டா கூறினார். பெங்களூரில் நடந்த கிரிஷி மேளாவில் அதிக பேரின் ஈர்ப்பை இந்த கிருஷ்ணா காளை மாடு தான் கொண்டுள்ளது. இந்த மாட்டிற்கு தற்போது மூன்றரை வயது ஆகிறது. பழமையான இனத்தை சேர்ந்ததாலும், அதிக ஆற்றல் கொண்டதாலும் தான் இதற்கு இவ்வளவு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள் நடக்கும் இந்த கிரிஷி மேளாவை கர்நாடக மாநில முதல்வரான பசவராஜ் பொம்மை அவர்கள் துவங்கி வைப்பதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் அந்நிகழ்வை துவங்கி வைக்க முடியவில்லை. இவருக்கு பதிலாக நவீன விவசாய முறைகளை அறிமுகப்படுத்தி வரும் பழங்குடி பெண்ணை வைத்து இந்நிகழ்வை துவக்கி வைத்தனர்.

காளை மாடுகளில் பல பழமையான இனங்கள் அழிந்துவரும் இந்த கால கட்டத்தில், இது போன்ற காளை மாடுகள் நம் நாட்டின் பொக்கிஷமாகவே கருதப்பட வேண்டும். மேலும் இந்த வகை மாடுகள் அதிகமானால் தான், அவை பல வகையில் விவாயிகளுக்கு உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: