பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தவர். இவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. 84 வயதில் பாபா வங்கா பாட்டி காலமானார். அதற்கு முன்னதாக அவர் கணித்து வைத்துள்ளதாக கூறப்படும் 85 சதவீத சம்பவங்கள் பலித்துள்ளதாக மக்களால் நம்பப்படுகிறது. அமெரிக்காவின் 9/11 தாக்குதல், 2022ம் ஆண்டு மக்களை புதுவித வைரஸ் தாக்கும், தண்ணீர் பஞ்சம் ஏற்படும், அதிகப்படியான டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையே குழப்பம் ஏற்படும் என பல விஷயங்களை கணித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் எழுத்தாளர் வாலண்டின் சிடோரோவிடம் தெரிவித்திருந்த கணிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆம், பாபா வங்கா இறப்பதற்கு முன்பு தெரிவித்த கணிப்புகளின் படி, ரஷ்யா உலகின் வல்லரசாக மாறும், ஐரோப்பாவின் நிலங்கள் வளமிளக்கும் என தெரிவித்திருந்துள்ளார். அனைத்தும் பனிக்கட்டி போல் கரைந்துவிடும், விளாடிமிர் ரஷ்யாவின் மகத்துவம் மற்றும் புதினின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என 1996ம் ஆண்டு அவர் தெரிவித்துள்ளார். இதே ஆண்டு தான் தனது 86 வது வயதில் பாபா வங்கா பாட்டி காலமானார்.
1999 டிசம்பரில் ரஷ்யாவின் தற்காலிக ஜனாதிபதியாக புதின் பதவியேற்ற பிறகு, அவர் ரஷ்ய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி உலக விவகாரங்களில் முக்கிய பங்கு வகித்தது நினைவு கூறப்பட்டு வருகிறது. பாபா வங்கா பாட்டி கூறிய பல கணிப்புகள் உண்மையாகியுள்ளது. குறிப்பாக 2016 ஆம் ஆண்டளவில் ஐரோப்பா அதன் தற்போதைய வடிவத்தில் இருக்காது என்று அவர் கணித்திருந்தார். ஜூன் 23, 2016ம் வாக்களிப்பு மூலமாக பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.
Also Read : சிசிடிவியல் வசமாக சிக்கிய சேட்டை பைக்கர் - ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை
ஆகஸ்ட் 1999ல் ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான குர்ஸ்க் கடலில் மூழ்கும் என்றும், அதனால் முழு உலகமும் துக்கப்படும் என்றும் அவர் கணித்தார். நீர்மூழ்கிக் கப்பல் ஆகஸ்ட் 2000ல் பேரண்ட்ஸ் கடலில் மூழ்கியது, அனைத்து பணியாளர்களும் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான அவர், நாட்டை வீழ்த்தும் பேரழிவைச் சந்திப்பார் என்றும் வங்கா கணித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அமெரிக்காவின் கடைசி அதிபர் பராக் ஒபாமா என்ற அவரது கணிப்பு மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில் புதின் பற்றிய பாபா வங்கா பாட்டியின் கணிப்புகள் இணையத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.