ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஆமைக்கு உதவிய எருமை... வைரல் வீடியோ!

தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஆமைக்கு உதவிய எருமை... வைரல் வீடியோ!

தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஆமைக்கு உதவிய எருமை

தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஆமைக்கு உதவிய எருமை

Viral Video | இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ 66,000க்கும் அதிகமான வியூஸ்களையும், லைக்குகளை குவித்துள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு டன் கணக்கில் பல கருத்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இணையத்தில் பல விலங்குகளின் வீடியோக்கள் தினந்தோறும் வைரலாகி வருகின்றன. அதிலும், இரு இனத்தை சேர்ந்த விலங்குகள் நட்புறவாடும் வீடியோக்கள் கூட இணையத்தில் பெரிதும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது. அதிலும், விலங்குகளிடையே இருக்கும் ஒரு குணாதிசயம் என்னவென்றால், தனது குழுவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உதவும் மனப்பான்மை அவற்றிற்கு இருக்கும்.

அதுவே, அவை மற்ற இனத்தை சேர்ந்த விலங்குகளுக்கு உதவுவதை பார்க்கும் போது மனதை கவரும் விதமாக இருக்கும். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், எருமை ஒன்று ஆமைக்கு உதவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ கிளிப் இப்போது பல்வேறு சமூக ஊடக தளங்களில் பலரால் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை IFS அதிகாரி சுசாந்தா நந்தா தனது டி விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவுடன், "எல்லோரும் அன்பாக நடந்துகொள்ளலாம்... எருமை ஆமையைத் திருப்பிவிட்டு காப்பாற்றியது போல" என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார்.

பத்தே வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மரத்தின் அருகே நின்றுகொண்டிருந்த எருமை, எதையோ கீழே குனிந்து தனது கொம்புகளால் தள்ள முயல்வதைக் காணலாம். அதனை உன்னிப்பாகப் கவனித்தால், எருமை ஒன்று அதன் கொம்பைப் பயன்படுத்தி தலைகீழாக கவிழ்ந்தபடி தத்தளித்த ஆமையை புரட்டி விடுவதைக் காணலாம். ஆரம்பத்தில் ஆமையை புரட்டுப்போடுவதில் மாடு தோல்வியடைந்தாலும், அது வெற்றிபெறும் வரை மீண்டும் மீண்டும் முயற்சித்தது. ஆனால் ஆமை எப்படி கவிழ்ந்து கிடந்தது என்பது தெரியவில்லை.

Also Read : டிக்டாக் வீடியோவால் மாட்டிக்கொண்ட திருடன்... வைரலாகும் வீடியோ!

இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ 66,000க்கும் அதிகமான வியூஸ்களையும், லைக்குகளை குவித்துள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு டன் கணக்கில் பல கருத்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இதேபோல IFS அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்த மற்றொரு வீடியோவில், பெரிய தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி பூனையை காப்பாற்ற குரங்கு ஒன்று போராடும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

Also read... பெண்களை மாடுகளுடன் ஒப்பிட்டு எடுத்த விளம்பரம்... வலுத்த எதிர்ப்புகள்!

அந்த வீடியோவில் குட்டி பூனை, பெரிய தொட்டியில் இறங்கிய பிறகு, எப்படி மேலே வருவது என்று தெரியாமல் தத்தளித்தது. இதனை கண்ட குரங்கு பூனையை காப்பாற்ற தொட்டியில் இறங்கியது. ஆனால் பூனையை தூக்கிக்கொண்டு எப்படி மேலே ஏறுவது என்று அதற்கு தெரியவில்லை. நீண்ட நேரம் போராடிய பிறகு அங்கு வந்த சிறுமி அந்த பூனையை மேலே தூக்கி விடுகிறார். அதனை அன்போடு அரவணைத்து கொள்கிறது அந்த குரங்கு.

Also Read : பூனை குட்டியை காப்பாற்ற வழியற்ற நிலையில் சிறுமியிடம் உதவி கோரிய குரங்கு - வைரலாகும் வீடியோ

நேற்று பகிரப்பட்ட இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான லைக்குகளை, வியூஸ்களையும் பெற்றுள்ளது.

First published:

Tags: Trending