ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

'பிடெக் டீக்கடை'... படித்துக்கொண்டே டீக்கடை நடத்தும் மாணவி.. குவியும் பாராட்டுகள்!

'பிடெக் டீக்கடை'... படித்துக்கொண்டே டீக்கடை நடத்தும் மாணவி.. குவியும் பாராட்டுகள்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

பரிதாபாத்தை சொந்த ஊராகக் கொண்ட வர்த்திகா சிங் என்ற மாணவி பிகாரில் தற்போது பி.டெக் பட்டப்படிப்பை படித்து வருகிறார். ஆனால் படித்துக் கொண்டிருக்கும் போதே ஏதேனும் தொழில் செய்து பெரிய தொழிலதிபராக வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பரிதாபாத்தை சேர்ந்த வர்த்திகா சிங் என்ற மாணவி பீகாரில் உள்ள கல்லூரியில் பி.டெக் படித்துக் கொண்டே டீ விற்கும் தொழிலில் இறங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரைப் பற்றிய செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

  பரிதாபாத்தை சொந்த ஊராகக் கொண்ட வர்த்திகா சிங் என்ற மாணவி பிகாரில் தற்போது பி.டெக் பட்டப்படிப்பை படித்து வருகிறார். ஆனால் படித்துக் கொண்டிருக்கும் போதே ஏதேனும் தொழில் செய்து பெரிய தொழிலதிபராக வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க டீக்கடை வைப்பதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி தனக்கென புதிதாக டீக்கடை ஒன்றை துவங்கியுள்ளார்.

  தன்னுடைய கனவையும் லட்சியத்தையும் நிஜமாக்க இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வர்த்திகாவின் இந்த வீடியோ மற்றும் அவரது டீக்கடை வைரலாகி இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

  ReadMore : எனக்கொரு ப்ளேட் கொடுங்க..பானிப்பூரி சாப்பிடும் யானை..வைரலாகும் வீடியோ!

  வீடியோவின் ஆரம்பத்தில் தன்னைப் பற்றிய அறிமுகம் செய்து கொள்ளும் வர்த்திகா, அதன் பின்பு எவ்வாறு தன்னுடைய கனவை நினைவாக்க படித்துக் கொண்டிருக்கும் போதே இந்தத் தொழிலில் இறங்கினார் என்பதை பற்றி தெரிவித்துள்ளார். மேலும் பெரும்பாலானோர் கூறிய அறிவுரைப்படி தொழில் செய்வதற்கு பட்டப்படிப்பு முடியும் வரை என்னால் காத்திருக்க முடியாது.

  என்னுடைய படிப்பு முடிவதற்கே நான்காண்டுகள் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார். எனது கனவை நினைவாக்கும் முயற்சியில் இப்பொழுதிருந்தே ஈடுபட விரும்பி இந்த டீக்கடையை துவங்கியுள்ளதாகவும், தன்னுடைய டீக்கடையின் கிளைகளை இந்தியா முழுவதும் பரப்பி பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதே முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

  இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டசிறிது நேரத்திலிருந்தே பல்வேறு லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் இவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் வருகின்றன. இளம் தொழிலதிபருக்கு பாராட்டுக்கள் என பலர் கமெண்ட்கள் செய்து வருகிறார்கள்.

  பலர் வர்த்திகாவின் இந்த தன்னம்பிக்கை பாராட்டிக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் இவரின் முயற்சிக்கு மதிப்பளிப்பதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதைப் பற்றி எழுதிய இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் “உங்களது சிரிப்பும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது, உங்களுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் “இந்த பெண்ணிற்கு எனது மிகப்பெரும் மரியாதை” என கமெண்ட் செய்துள்ளார்.


  மூன்றாவது நபர் “இவருடைய தைரியத்திற்காகவும் முயற்சிக்காகவும் தலை வணங்குகிறேன்” என கமெண்ட் செய்துள்ளார். இவ்வாறு வர்த்திகாவின் இந்த சிறிய அளவிலான டீக்கடை இந்திய அளவில் ட்ரெண்டாகி வர்த்திகாவை பிரபலமாக்கியுள்ளது.

  ஆனால் பட்டதாரி ஒருவர் டீக்கடை நடத்தி தொழிலதிபராக விரும்புவது இதுவே முதல் முறையல்ல. ப்ராஃபுல் பில்லூர் என்ற இளம் தொழிலதிபரும் எம்பிஏ பட்டதாரியும் ஆன ஒருவர் ஏற்கனவே டீக்கடைகளை திறந்து, டீ விற்கும் தொழிலை மிக லாபகரமானதாக செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார். தன்னுடைய CAT தேர்வில் தோல்வியுற்ற பிறகு, தனக்கு சொந்தமாக டீக்கடையை ஒன்றை திறக்க விரும்பிய பில்லூருக்கு தற்பொழுது இந்தியா முழுவதும் 20 கிளைகள் உள்ளன.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending Videos, Viral Video