Home /News /trend /

பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சகோதரர்கள் - எமோஷ்னல் வீடியோ!

பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சகோதரர்கள் - எமோஷ்னல் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

தன்னுடைய சகோதரன் தன்னை பிறந்தநாளுக்கு வாழ்த்தும் பலூனோடு வருவதைப் பார்த்ததும் மனம் உடைந்து அழும் இளைய சகோதரரின் வீடியோ..

பணி, தொழில் நிமித்தமாக அல்லது கல்வி நிமித்தமாக குடும்ப உறுப்பினர்களை பிரிந்து செல்லும் நபர்கள் மீண்டும் ஒன்று சேரும்போது அங்கு உணர்ச்சிகரமான நிகழ்வுகள் அரங்கேறும். ஸ்மார்ட்ஃபோன், இன்டர்நெட் போன்றவற்றின் உதவியால், இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிக் கிடக்கின்றன.

இதுவும் அப்படியொரு வீடியோ என்றாலும் கூட, இதில் இன்னும் சில கூடுதல் சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. இன்ஸ்டாகிராம் தளத்தில், ‘குட் நியூஸ் கரஸ்பாண்டண்ட்’ என்ற பேஜ் சார்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் கேப்சனில், “பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாத அல்லது பேசிக் கொள்ளாத சகோதரர்கள் இவர்கள்.

குறிப்பாக, இந்த சகோதரர்களின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த நெகிழ்ச்சிக்குரிய நிகழ்வு நடந்துள்ளது. அதில், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பெரும் சர்பிரைஸ் ஒன்றை மூத்த மகன் கொடுத்திருக்கிறார். தனது இளைய சகோதரரின் பிறந்தநாள் என்பதை அறிந்து, வாழ்த்துகளோடு வந்து அசத்தினார் அவர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னுடைய சகோதரன் தன்னை வாழ்த்தும் பலூனோடு வருவதைப் பார்த்ததும் மனம் உடைந்து அழும் இளைய சகோதரரின் நிலை, நம்மையும் கண்கலங்கச் செய்வதாக அமைந்துள்ளது. வாழ்க்கையின் அந்தந்த நிமிடங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மற்றொரு செய்தியும் இந்த வீடியோவுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

also read : உண்மையிலேயே சூரியன் இப்படித்தான் செயல்படுகிறதோ? வைரலாகும் 90ஸ் கிட்ஸ் ‘Glucon D’ விளம்பரம்!
அதில், “எதையேனும் செய்வதற்கு உங்கள் இறுதி நாள் வரை காத்திருக்க வேண்டாம். இன்றே மன்னித்து விடுங்கள். உங்கள் அன்புக்குரியவரிடம் இன்றே உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். கட்டியணைக்கலாம், முத்தம் கொடுக்கலாம். நீங்கள் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறீர்கள் என்பதை உடனடியாக வெளிப்படுத்துங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. நாளை என்று எதையும் ஒதுக்கி வைக்க வேண்டாம். பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரா’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

also read : ஒரு துண்டு பிரெட்டில் இப்படி ஒரு ஓவியமா! வைரல் வீடியோ..

தந்தை - மகன் நெகிழ்வான சந்திப்பு

சில நாட்களுக்கு முன்பாக, தன் தந்தையை மகன் ஒருவர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சர்பிரைஸாக சந்தித்த நிகழ்வு குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மும்பையைச் சேர்ந்த அந்த நபர் வேலை நிமித்தமாக ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.

மீண்டும் வீடு திரும்பிய அவர், தனது சகோதரிக்கு மட்டுமே தகவல் கொடுத்திருந்தார். வீடு சென்று தாயை திடீரென சந்தித்தபோது, அவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். அதே சமயம், தன் தந்தை எதிரே அந்த நபர் சென்ற போது, அவர் ஒரு கணம் திகைத்து நின்று விட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், மகனை கட்டியணைத்து உடைந்து அழுதார்.


வெகு காலத்திற்கு சந்தித்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துக் கொள்ளும் போது, மனதில் தேக்கி வைத்திருக்கும் பாசம் வெள்ளமாக பாய்ந்து வருகிறது என்பதேயே இந்த இரு நிகழ்வுகளும் உணர்த்துகின்றன.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி