• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • உலகிலேயே அதிக எடையுள்ள அம்ராபுரி மாம்பழங்களை வளர்க்கும் மத்தியபிரதேச சகோதரர்கள்!

உலகிலேயே அதிக எடையுள்ள அம்ராபுரி மாம்பழங்களை வளர்க்கும் மத்தியபிரதேச சகோதரர்கள்!

உலகிலேயே அதிக எடையுள்ள அம்ராபுரி மாம்பழங்கள்

உலகிலேயே அதிக எடையுள்ள அம்ராபுரி மாம்பழங்கள்

ராமேஸ்வர் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இரு சகோதரர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட இந்த மிகப்பெரிய விவசாய நிலத்தை சொந்தமாகக் வைத்துள்ளனர்.

  • Share this:
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் 50 வகையான மாம்பழங்களைக் கொண்ட ஒரு பழத்தோட்டத்தை வளர்த்து வருகின்றனர். அதில் 'அம்ராபுரி' வகை மாம்பழ மரங்களும் அடங்கும். இது கிரகத்தின் மிகப் பெரிய பழமாகக் கருதப்படுகிறது. மேலும் இவர்கள் தோட்டத்து மாம்பழங்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல அமெரிக்க மாநிலமான புளோரிடாவில் பயிர்ப்படும் 'சென்சேஷன்' என்ற மாம்பழம் வகை மரத்தையும் இவர்கள் வளர்த்து வருகின்றனர்.

ராமேஸ்வர் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இரு சகோதரர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட இந்த மிகப்பெரிய விவசாய நிலத்தை சொந்தமாகக் வைத்துள்ளனர். இந்த விவசாய பூமி அவர்கள் தந்தையிடமிருந்து பரம்பரை வழிமுறைகள் மூலம் கிடைத்ததாக இரு சகோதரர்களும் தெரிவித்துள்ளனர். தங்கள் ஆர்க்கிட்டில் உள்ள ஒரு மரம் மாம்பழங்களின் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் ஒரே மாதிரியான சுவையை கொண்டுள்ளன என்று அவர்கள் பெருமையாகப் பேசிக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்ராபுரி நமது கிரகத்தினுள் கிடைக்கும் மிகப்பெரிய மாம்பழமாக கருதப்படுகிறது. மேலும் இவை ஆப்கானிஸ்தான் பகுதியில் பெரும்பாலும் விளைகிறது. இந்த மாம்பழங்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 கிலோ எடையுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு வளரும் இரண்டாவது அதிக எடை கொண்ட மாம்பழ வகைக்கு ‘சென்சேஷன்’ என்று பெயரிடப்பட்டது. இது ஆரம்பத்தில் புளோரிடாவில் 1921ம் ஆண்டு பயிரிடப்பட்டது. இது ஒரு தனித்துவமான வகையாகும். இந்த வகை மாம்பழங்களை அவ்வளவு சாதாரணமாக வேறெங்கும் பார்க்கமுடியாது.

இதுகுறித்து இரு சகோதரர்களில் ஒருவரான ராமேஸ்வர் ANI-க்கு அளித்த பேட்டியில், “எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த மாம்பழங்களை நாங்கள் ஆர்கானிக்காக வளர்க்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால், துபாயில் இருந்து சில வாடிக்கையாளர்கள் இதனை வாங்குவர்" என்று கூறியுள்ளார்.இந்திய சந்தையில் ஒரு கிலோ 'சென்சேஷன்’ மாம்பழங்கள் ரூ.1000-த்திற்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வளர்ந்து வரும் தாவரங்களை நாங்கள் சேகரித்து வளர்த்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்த பழத்தோட்டத்தில் வளரும் மற்ற வகை மாம்பழங்களில் மேற்கு வங்கத்தின் மால்டா மற்றும் ஹிம்ஸாகர், குஜராத்தின் கேசர், உத்தரபிரதேசத்தின் லாங்டா, பீகார் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் சவுன்சா உள்பட நாட்டின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் மாம்பழங்களும் அடங்கும்.

மாம்பழங்கள் பெரும்பாலான இந்தியர்களுக்கு பிடித்த பழங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. ஆனால் இந்த பழத்தை மிகவும் விரும்புவது இந்தியர்கள் மட்டுமல்ல. பிற நட்டு மக்களும் மாம்பழங்களை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இந்தியா ஒரு பெரிய மாம்பழ ஏற்றுமதியாளராக விளங்குகிறது. இது 1,500 க்கும் மேற்பட்ட வகைகளில் சுவையான கோடைகால பழங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. மேலும் வணிக நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 வகைகள் வளர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Also read... Dubai Lottery: ரூ. 40 கோடி ஜாக்பாட் - துபாயில் லாட்டரி வென்ற கேரளாவைச் சேர்ந்த நபர்!

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கூற்றுப்படி, ஆந்திரா, பீகார், குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மாம்பழ உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: