பெற்றோர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சேர்க்கும் செல்வத்தை பிள்ளைகளுக்காக விட்டுச்செல்கிறார்கள். கடைசி காலத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு தங்களது சொத்துக்களை சரிசமமாக பங்கிட்டு உயில் எழுதி கொடுப்பதும் காலங்காலமாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவரின் தந்தை சொத்துக்கள் மகளுக்கு சேர வேண்டும் என்றால் தனது கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளது இணையத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றாத காரணத்தினால் $12 மில்லியன் டாலர்கள் சொத்துக்களை வாரிசாகப் பெற முடியாமல் போனது. எனவே அவரை இணையவாசிகள் பலரும் 'ப்ரோக் மில்லியனர்' என்று அழைத்து வருகின்றனர்.
கிளேர் பிரவுன் $12 மில்லியன் சொத்துக்களை வாரிசாகப் பெற உரிமை பெற்றுள்ளார். ஆனால் அதனை அனுபவிக்க முடியாமல் சோசியல் வெல்ஃபேர் மையத்தில் தங்கியுள்ளார். தற்போது, அவர் சிட்னியின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள வெல்ஃபேர் மையத்தில் தனது மனைவி லாரன் மற்றும் அவர்களது ஒரு வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவ்வளவு மதிப்பு மிக்க சொத்துக்களைப் பெற கிளேர் செய்ய வேண்டியது ஒன்றுமே கிடையாது. அவரது தந்தையின் கடைசி ஆசையான நிரந்தர வேலை ஒன்றில் சேர்ந்தால் மட்டும் போதும். ஆனால் அவர் அதை செய்யாததால் குடும்பத்தினர் சொத்துக்களை தர மறுத்து வருகின்றனர்.
நிரந்தமாக ஒரு வேலையை பெற்றுக்கொள்வதால் இவ்வளவு சொத்துக்கள் கிடைக்கும் என்றால் அதை செய்யலாமே என நினைக்கலாம். ஆனால் அங்கு தான் கிளேருக்கான சிக்கலே இருக்கிறது. கவனம்-பற்றாக்குறை/அதிக செயல்பாடு கோளாறு (ADHD) மற்றும் மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சனைகள் உள்ளன. எனவே அவருக்கு வேலை கிடைப்பது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியுற்ற கிளேர், குடும்பத்தினரிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை தரச் சொல்லி பலமுறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்.
இதுகுறித்து கிளேர் கூறுகையில், "நான் ஏன் சமூகத்தில் செயல்படும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது, இருப்பினும், எனக்கு நோயை கண்டறிந்த பிறகு, அது நடக்காது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு ADHD நான் வண்டி ஓட்ட கூட கற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் என்னால் எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது”
தான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும், அப்பாவின் கடைசி ஆசையின் படி தன்னால் ஒரு வேலையில் சேர முடியாது என்பதால் தனக்கு உதவும் படியும் பலமுறை மன்றாடியுள்ளார். ஆனால் குடும்பத்தினர் இதனைக் காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. எனவே தற்போது கிளேர் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
Also Read... சாதிக்க வயது ஒரு தடை இல்லை! 64 வயதில் அசத்தலாக கால்பந்தை சுழற்றும் தாத்தா.. வைரல் வீடியோ.
கிளேரின் தந்தையின் ஒரு விருப்பம் அவர் நிரந்தர வேலையில் சேர வேண்டும் என்பது, மற்றொரு விருப்பம் சமுதாயத்திற்கு தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பது, இந்த இரண்டையும் செய்யாமல் சொத்துக்களை பெற முடியாது என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தற்போது வழக்கு முடிவு நீதிமன்றத்தின் கையில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Australia, Father, My Daughter, Property