Home /News /trend /

நாஜி படையின் கொலை முயற்சி, விமான விபத்து, புற்றுநோய், கொரோனா.. அனைத்தையும் வென்ற உலகப்போர் வீராங்கனைக்கு 100-வது பிறந்தநாள்

நாஜி படையின் கொலை முயற்சி, விமான விபத்து, புற்றுநோய், கொரோனா.. அனைத்தையும் வென்ற உலகப்போர் வீராங்கனைக்கு 100-வது பிறந்தநாள்

குடும்பத்தினருடன் ஜாய் ஆண்ட்ரூ.

குடும்பத்தினருடன் ஜாய் ஆண்ட்ரூ.

நாஜி படையின் கொலை முயற்சி, விமான விபத்து, புற்றுநோய், கொரோனா என அனைத்தையும் வென்ற மூதாட்டி ஜாய் ஆண்ட்ரூஸுக்கு 100-வது பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது.

100 வயதை எட்டியுள்ள உலகப் போர் வீராங்கனை ஜாய் ஆண்ட்ரூ, நாஜி படுகொலை முயற்சி, விமான விபத்து மற்றும் மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்பிப்பிழைத்தவர் ஜாய் ஆண்ட்ரூ. சமீபத்தில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் கொடிய கொரோனாவையும் எதிர்த்துப் போராடி தனது 100-வது பிறந்தநாளை வெற்றிகரமாகக் கொண்டாடினார். டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட ஜாய் ஆண்ட்ரூ, கடந்த மே மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியது.

எனினும் போர் வீராங்கனையான ஆண்ட்ரூஸ் குறிப்பிட்ட சில காலத்திலேயே கொடிய வைரஸை வென்று காண்பித்தார். தனது 100-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வைரஸை தோற்கடித்து வலுவாக மீண்டு வந்தார். அவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரிட்டிஷ் ராணி ஒரு வாழ்த்து அட்டையையும் தனிப்பட்ட செய்தியைக் கொண்ட ஒரு கடிதத்தையும் ஆண்ட்ரூஸுக்கு அனுப்பியிருந்தார். அதில் மரணத்தின் பிடியிலிருந்து திரும்பி வந்த அவரின் மன உறுதியை வெகுவாகப் பாராட்டியிருந்தார்.

Also read: Biggboss 4 Tamil | ரியோவிடம் சனம் வாக்குவாதம்.. வேடிக்கை பார்த்து சிரிக்கும் பாலாஜி, ஷிவானி..

1920-இல் லண்டனில் பிறந்த ஆண்ட்ரூஸ், இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, மகளிர் துணை விமானப்படையில் சார்ஜெண்டாகச் சேர்ந்தார். ஜெர்மனியின் மீதான போரின்போதும் அவர் பணியாற்றியுள்ளார். பிரிட்டிஷாரின் ராயல் ஏர் ஃபோர்ஸில் (RAF) ’பாம்பர் கமாண்ட்’ பிரிவில் 1936 முதல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். போரின் வடுக்களைத் தாங்கிய ஜெர்மன் யூத குடும்பத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ, பிறகு ஜெர்மனியின் டசெல்டார்ஃப் பகுதியில் பணியமர்த்தப்பட்டார். அவர் ஒரு வயதான தம்பதியுடனும் நாஜியாக இருந்த அவர்களின் மகளுடனும் தங்க வைக்கப்பட்டார்.

அங்கு ஒரு விபத்து மூலம் ஆண்ட்ரூஸை கொலைசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாஜி கட்சியினர் அந்த முயற்சியை செய்திருந்தனர். அதிலிருந்தும் அவர் தப்பிப்பிழைத்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஆண்ட்ரூ பிரிட்டிஷ் வெளிநாட்டு ஏர்வேஸ் கார்ப்பரேஷனின் முதல் விமான பணிப்பெண்களில் ஒருவராக இருந்தார். அப்போது அவர் பயணித்த ஒரு விமானம் எரிபொருள் கோளாறு காரணமாக லிபியாவில் விபத்துக்குள்ளானது. அதில் ஒரு பயணி மட்டுமே உயிரிழந்தார். ஆண்ட்ரூ உட்பட மற்ற பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். பயணிகள் அனைவரும் நாடோடி குழுக்களால் மீட்கப்பட்டனர்.இதுதவிர, ஆண்ட்ரூ 1970-களில் மார்பக புற்றுநோயிலிருந்து தப்பினார். அவரது கணவர் டேவிட், RAF படைத் தலைவர் ஆவார். இவர் 2013-இல் புற்றுநோயால் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆண்ட்ரூ இப்போது யார்க்கில் உள்ள மினிஸ்டர் கிரெஞ்ச் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார்.

ஆண்ட்ரூவைப் போலவே, கனடாவில் கல்கரி பகுதியிலுள்ள வின்னிஃபிரட் மாவிஸ் மாகோர் என்பவர் 2-ஆம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராயல் ஏர் ஃபோர்ஸின் ’பாம்பர் கமாண்டில்’ இருந்தவர். அங்கு அவர் சமையல்காரராகப் பணியாற்றியவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு ராணி, கவர்னர் ஜெனரல், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பலரிடமிருந்தும் வாழ்த்து கடிதங்கள் குவிதன.
Published by:Rizwan
First published:

Tags: Breast cancer, CoronaVirus, Joy andrews, Plane crash, Second world war, Women achievers

அடுத்த செய்தி