மெக்ஸிகோவின் மணியால்டெபெக் லகூனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.6) குளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, முதலையிடம் சிக்கிக்கொண்ட தனது இரட்டை சகோதரியைக் காப்பாற்றுவதற்காக 28 வயதான பிரிட்டிஷ் பெண் ஒருவர் அதன் முகத்திலேயே குத்தி முதலையை விரட்டியடித்துள்ளார்.
இரட்டை சகோதரிகளான ஜார்ஜியா மற்றும் மெலிசா லாரி ஆகியோர் பிரபலமான சர்ஃபிங் ரிசார்ட்டான புவேர்ட்டோ எஸ்கொண்டிடோவிலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, மெலிசா தண்ணீருக்கு அடியில் திடீரென மாயமாக மறைந்தார். மெலிசாவைக் கண்டுபிடித்த பிறகு, ஜார்ஜியா அவளை காப்பாற்றுவதற்காக இழுக்க முயன்ற போது, அவளை இழுத்து சென்ற முதலை மீண்டும் தாக்கியது. இந்த சமயத்தில் தான் ஜார்ஜியா முதலையை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து இரட்டை சகோதரிகளின் சகோதரி ஹன்னா கூறியதாவது, " திடீரென தண்ணீருக்குள் மறைந்த மெலிசாவை மீட்டபோது மயக்க நிலையில் இருந்ததால் அவளை பாதுகாப்பாக படகிற்கு இழுத்து செல்ல ஜார்ஜியா முயன்றுள்ளார். அந்த சமயம் மீண்டும் தாக்க வந்த முதலை மெலிசாவை மீண்டும் இழுத்து செல்ல முயற்சித்தது. இதையடுத்து ஜார்ஜியா முதலையை தாக்க ஆரம்பித்தாள். சில விலங்குகள் தாக்க வரும்போது தற்காப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனது தங்கை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறார். அதன் மூலம் சகோதரி மெலிசாவை காப்பாற்ற முடிந்தது "என்று ரேடியோ 1 நியூஸ்பீட்டிடம் கூறியுள்ளார்.
குளத்தில் முதலைகள் அதிகம் ஊடுருவியதால் நீச்சல் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் சுற்றுலா வழிகாட்டி நீச்சல் பாதுகாப்பானது என்று உறுதியளித்ததாகவும், அதனை நம்பி சென்றதாகவும் சகோதரிகளின் தாய் கூறியுள்ளார். இது குறித்து பிபிசி வெளியிட்ட அறிக்கையின்படி, சகோதரிகள் இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெலிசா கோமா நிலையில் இருக்கிறார். முதலைகளின் வாயிலிருந்து அனுப்பப்பட்ட எதையும் தண்ணீருடன் சேர்த்து மெலிசா குடித்திருக்கலாம். அதனால் அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களின் தாய் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் கூறியதாவது, “மெலிசா உயிருடன் இருக்கிறார். ஆனால் அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானதா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அவள் நுரையீரலில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. மேலும் அவள் இரும்பும்போது இரத்தம் வெளியேறுகிறது. அவளுக்கு நுரையீரலில் ஏதேனும் துளை ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. " என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஹன்னாவின் கூற்றுப்படி, ஜார்ஜியா ஒரு அனுபவமிக்க டைவர் ஆவார். ஆனால் அவர் முதலையை நேருக்கு நேர் பார்த்தபோது பயந்துள்ளார். எனது தங்கைக்கு அந்த தற்காப்பு பயிற்சி கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவளது அட்ரினலின் சரியான நேரத்தில் தூண்டப்பட்டதால், அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என அவளுக்கு தெரிந்திருந்தது. மெலிசாவின் நிலை குறித்து மருத்துவர்களிடம் ஜார்ஜியா கேட்டு தெரிந்துகொள்கிறார். இது கடினமான நேரம். இவ்வளவு சிறந்த சகோதரி என்னிடம் இல்லையென்றால் தற்போது எனக்கு ஒரு சகோதரி குறைவாக இருந்திருப்பார். " என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.