மும்பையில் வட பாவ் சாப்பிட்ட பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ்... அவர் கொடுத்த ரியாக்சன் என்ன தெரியுமா?

வட பாவ்

இந்தியாவில் தனது பிரதிநிதித்துவத்தின் போது, ​​எல்லிஸ் நாடு முழுவதிலும் பிரபலமாக இருக்கும் சில ஸ்ட்ரீட் உணவுகளை சாப்பிட்டு வந்தார்.

  • Share this:
இந்திய ஸ்ட்ரீட் உணவுகள் உலகளவில் பிரபலமடைந்துள்ளது. ஏனெனில், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இந்திய ஸ்ட்ரீட் உணவுகளை சுவைத்து பார்க்க அதிக விருப்பம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் சம்பீத்தில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் மும்பையின் பிரபல சிற்றுண்டியான வட பாவ்-ஐ சுவைத்து பார்த்தார். மேலும் அதன் சுவையில் மெய்மறந்து போன அவர், " வட பாவ் நான் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்திய உணவாகும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் தனது பிரதிநிதித்துவத்தின் போது, ​​எல்லிஸ் நாடு முழுவதிலும் பிரபலமாக இருக்கும் சில ஸ்ட்ரீட் உணவுகளை சாப்பிட்டு வந்தார். தற்போது இவர் மகாராஷ்டிராவில் சில பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் பிரிட்டிஷ் உயர் ஆணையர் எல்லிஸ் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், கையில் வட பாவ் உடன் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். அவருக்கு பின்னால் கேட்வே ஆஃப் இந்தியா தெரிந்தது. மேலும் அந்த பதிவில் எல்லிஸ் குறிப்பிட்டிருந்ததாவது, "மும்பையில் ஒரு வட பாவை சாப்பிட எப்போதும் எனக்கு நேரம் இருக்கும்." என்று கேப்ஷன் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வட பாவ் என்பது ஒரு பண்ணுக்கு நடுவே வறுத்த உருளைக்கிழங்கு போண்டாக்கள் வைக்கப்பட்டிருக்கும். மசாலாவுடன் சேர்த்து வறுக்கப்பட்ட பச்சை மிளகாயும் அதனுடன் பரிமாறப்படுகிறது. மேலும் சில விற்பனையாளர்கள் வட பாவுக்கு சாஸ்களை வைப்பார்கள், முக்கியமாக பச்சை மிளகாய் இதனுடன் சேர்த்து வைப்பது வழக்கம். இந்திய தெரு உணவை அவர் விரும்புவதாக, ட்விட்டர் பதிவு மூலம் அவர் தெரிவித்ததை தொடர்ந்து பல ட்விட்டர் யூசர்கள் அவருக்கு பிற பிரபலமான இந்திய ஸ்ட்ரீட் புட்களை பரிந்துரைத்து வருகின்றனர்.Also read... உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட வடா பாவ் துபாயில் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

எந்தெந்த மாநிலத்தில் எந்த உணவு மிகவும் பிரபலம் என்றும் அவரது பதிவுக்கு யூசர்கள் ரீட்வீட் மற்றும் கமெண்ட் மூலம் ரிப்ளை செய்து வருகின்றனர். அதில் ஒருவர் எல்லிஸிடம் மஹாராஷ்டிராவில் தங்கியிருக்கும் சமயத்தில் நெய் போலியை முயற்சி செய்யுமாறு கேட்டு கொண்டார். மற்றொரு யூசர் புனே சென்று மிசல் பாவை முயற்சிக்க வேண்டும் என்று எல்லிஸுக்கு பரிந்துரைத்தார்.வட மாநில ஸ்ட்ரீட் உணவுகள் இந்தியா முழுவதும் பிரபலமைந்துள்ளது. உதாரணத்திற்கு பானிபூரி ஒரு வடமாநில தின்பண்டமாகும். இப்போது தமிழகம் முழுவதும் தெருவிற்கு ஒன்று என இந்த பானிபூரி வண்டியை நாம் காணலாம். அந்தளவுக்கு பானிபூரி மீது அளவில்லா காதல் இந்திய மக்களுக்கு இருக்கிறது. மேலும், இந்தியா மட்டுமல்லாது உலக மக்கள் பலருக்கும் இந்திய உணவுகள் மீது அதிக ஆர்வம் உள்ளது என்றால் அது மிகையாகாது.
Published by:Vinothini Aandisamy
First published: