இங்கிலாந்தைச் சேர்ந்த தோட்டக்காரர் ஒருவர் தக்காளிச் செடியின் ஒரே தண்டில் இருந்து 839 தக்காளிகளை அறுவடை செய்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் ஸ்டான்டெட் அபாட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் டக்ளஸ் ஸ்மித். ஐ.டி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் அவர், விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக உள்ளார். தனது வீட்டிற்கு பின்புறத்தில் பிரத்யேக தோட்டம் ஒன்றை அமைத்துள்ள டக்லஸ், அதில் விதவிதமான காய்கறிகளை வளர்த்து வருகிறார். பல்வேறு ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை படித்து, காய்கறிகளை இயற்கை முறையிலேயே, வித்தியாசங்களை புகுத்தி அதிக உற்பத்தியை சாத்தியமாக்கி வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அண்மையில் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள பசுமை தோட்டத்தில் 8X8 அடியில் தக்காளி சாகுபடியை மேற்கொண்டார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டில் மிகப்பெரிய தக்காளி செடியை வளர்த்தி இங்கிலாந்து முழுவதும் பிரபலமானார். இந்தமுறை, ஒரே தண்டில் அதிக தக்காளியை வளர்க்க வேண்டும் என்பது அவரது விருப்பம். நாள்தோறும் 3 முதல் நான்கு மணி நேரம் பசுமை தோட்டத்தில் செலவிட்டு தக்காளி செடிகளை நன்கு பராமரித்து வந்தார். அவரது முயற்சிக்கு பலனளிக்கும் விதமாக, தக்காளி செடியின் ஒரே தண்டில் 839 தக்காளி பழம் விளைந்துள்ளது.
இதற்கு முன்பு ஷ்ராப்ஷயர் பகுதியைச் சேர்ந்த கிரஹாம் டிரான்டர் ஒரு தண்டில் இருந்து 488 தக்காளிகளை அறுவடை செய்து சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், ஒரே தண்டில் இருமடங்கு அதிகமாக, அதாவது 839 தக்காளிகளை விளைய வைத்து டக்ளஸ் புதிய சாதனையை படைத்துள்ளார். உள்ளூரைச் சேர்ந்த போலீஸ் முன்னணியில் தக்காளி விளைச்சலை சரிபார்த்து, அவரையும் சாட்சியாக இணைத்துள்ளார்.
இது தொடர்பான ஆவணங்களையும் கின்னஸ் குழுமத்துக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் விரைவில் இது குறித்து மதிப்பீடு செய்து, உலக சாதனையாக அங்கீகரிப்பார்கள். இப்போதைக்கு அங்கீகரிக்கப்படாத சாதனையாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ நாளுக்காக காத்திருக்கிறார். கிரஹாம் டிரான்டர் 2010 ஆம் ஆண்டு இந்த உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார். சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் சாதனையை டக்ளஸ் முறியடித்துள்ளார்.
Also read... மகள் பிறப்பை கொண்டாடிய வியாபாரி - கடையில் குவித்த கூட்டம்... அப்படி என்ன செய்தார் தெரியுமா?
முன்னதாக, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிக உயரமான சூரியகாந்தி செடியை வளர்த்தி சாதனை படைத்திருந்தார். இந்த செடியின் உயரம் மட்டும் 20 அடி. அவர் வளர்த்த தக்காளி செடியின் உயரம் 27.5 இன்ச் ஆகும். அந்த செடியில் சுமார் 3 கிலோ தக்காளியை அறுவடை செய்தார். இது குறித்து பேசிய டக்ளஸ், தக்காளி செடியின் ஒரே தண்டில் 839 பழங்களை விளைய வைத்தது மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக கூறினார். இந்த சாதனை மேலும் பல சாதனைகளை படைக்க உந்துதலாக இருக்கும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.