முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஒரே நாளில் 37000 பேர் ரத்த தானம்.. சாதனை படைத்த தொண்டு நிறுவனம்.!

ஒரே நாளில் 37000 பேர் ரத்த தானம்.. சாதனை படைத்த தொண்டு நிறுவனம்.!

ரத்த தானம்

ரத்த தானம்

Blood Donation | “குளோபல் பிளட் ஹீரோஸ்” (#GlobalBloodHeroes) என்ற ரத்த தான இயக்கம் ஐரோப்பா முழுவதும் உள்ள மையங்கள், அர்ஜென்டினா, தாய்லாந்து, ஈராக் போன்ற 27 நாடுகளில் 360 இடங்களில் ரத்த தானம் முகாம் நடத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உயிர் காக்க உதவும் ரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வு இப்போது மக்களிடம் அதிகமாகவே உள்ளது. ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் ஓடுகிறது. எனவே 300 மில்லி லிட்டர் ரத்தம் வரை தானம் செய்யலாம். பொதுவாக ரத்த தான முகாம்கள் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகளாலும், தலைவர்கள் மற்றும் திரையுலகினரின் பிறந்த நாள், நினைவு தினம் போன்ற நாட்களில் அவர்களுடைய தொண்டர்கள் அல்லது ரசிகர்களாலும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பிரிட்டிஷைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, ரத்த தானம் செய்வதில் உலக சாதனை படைத்துள்ளது.

தி கார்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை ரத்த தானம் செய்ய வைத்ததன் மூலமாக பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் உலக சாதனை படைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. “குளோபல் பிளட் ஹீரோஸ்” (#GlobalBloodHeroes) என்ற ரத்த தான இயக்கம் ஐரோப்பா முழுவதும் உள்ள மையங்கள், அர்ஜென்டினா, தாய்லாந்து, ஈராக் போன்ற 27 நாடுகளில் 360 இடங்களில் ரத்த தானம் முகாம் நடத்தியுள்ளது. இதன் மூலம் 37 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் தொடங்கப்பட்ட ரத்த தான முகாமை, அமெரிக்காவில் நிறைவு செய்துள்ளது.

இப்படி ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான ரத்த தான முகாம்களை நடத்தியதற்காக பிரிட்டிஷ் தொண்டு நிறுவனத்தால் உலக சாதனை படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27 ரத்த தான முகாம் நடத்தப்பட்ட நிலையில், செப்டம்பர் 17ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த மாபெரும் நிகழ்வை ஹூ இஸ் ஹுசைன் என்ற சமூக நீதித் தொண்டு நிறுவனம், NHS இரத்தம் மற்றும் மாற்று சிகிச்சை (இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை) மற்றும் இமாம் ஆகியோர் இணைந்து நடத்தியுள்ளனர். இதற்கு முன்னதாக 2020ம் ஆண்டு ஒரே நாளில் 34 ஆயிரத்து 723 பேர் ரத்த தானம் வழங்கியதே உலக சாதனையாக இருந்து வந்த நிலையில், தற்போது 37 ஆயிரத்து 018 பேர் ரத்த தானம் வழங்கி முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர்.

Also Read : வேலை செய்யும் இடத்திற்கே போய் அப்பாவுக்கு மகள் கொடுத்த சர்ப்ரைஸ்... வைரல் வீடியோ.!

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ஹூ இஸ் ஹுசைன்' தொண்டு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. "ஒரு நாளில் சர்வதேச அளவில் அதிக இரத்த தானம் செய்ததற்காக வழங்கப்பட்டது” எனக்குறி அதிகாரப்பூர்வ சான்றிதழை பகிர்ந்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள 'நியூசிலாந்து இரத்த சேவை' நிறுவனம் உங்கள் #GlobalBloodHeroes பிரச்சாரத்தின் போது ஒரே நாளில் அதிக இரத்த தானம் செய்து உலக சாதனையை அடைய உதவியதில் நாங்கள் மிகுந்த பெருமைகொள்கிறோம். எங்களை பங்கேற்க அனுமதித்ததற்கு நன்றி” என பதிவிட்டுள்ளது.

top videos

    தி கார்டியன் செய்தி நிறுவனத்திற்கு தொண்டு நிறுவன இயக்குனர் முன்திசர் ராய் அளித்த பேட்டியில், “கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் கையிருப்பில் உள்ள ரத்த அளவுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஹூஸ் இஸ் ஹுசைன் தன்னார்வத் தொண்டர்கள் ஒன்று திரண்டு #GlobalBloodHeroes என்ற பிரச்சாரத்தை ஒருங்கிணைந்தனர். இரத்த தானம் என்பது உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய இரக்கச் செயலாகும். பல முதன்முறை நன்கொடையாளர்கள் முன்வந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் பலர் மீண்டும் ரத்த தானம் வழங்க உறுதியளித்துள்ளனர். இதனை மேலும் பல ஆண்டுகளுக்கு தொடருவோம் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Blood Donation, World record