Home /News /trend /

UK-வில் பாதுகாப்பாக டேட்டிங் செல்ல டேட்டிங் ஆப்களில் ஸ்பெஷல் ஸ்டிக்கர்கள் அறிமுகம்!

UK-வில் பாதுகாப்பாக டேட்டிங் செல்ல டேட்டிங் ஆப்களில் ஸ்பெஷல் ஸ்டிக்கர்கள் அறிமுகம்!

பாதுகாப்பாக டேட்டிங் செல்ல டேட்டிங் ஆப்களில் ஸ்பெஷல் ஸ்டிக்கர்கள் அறிமுகம்

பாதுகாப்பாக டேட்டிங் செல்ல டேட்டிங் ஆப்களில் ஸ்பெஷல் ஸ்டிக்கர்கள் அறிமுகம்

யுனைடெட் கிங்டமில் (United Kingdom) டேட்டிங் ஆப்கள், அரசுடன் இணைந்து அங்கு நடந்து வரும் தடுப்பூசி இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு புதிய பிரச்சாரத்தை துவக்கி உள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
பிரிட்டன் ஆன்லைன் டேட்டர்கள் கோவிட்டுக்கு எதிராக தடுப்பூசி போட்டிருக்கிறார்களா அல்லது தடுப்பூசி போட்டு கொள்வதை ஆதரிக்கிறார்களா என்பதை காண்பிக்க புதிய பேட்ஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இன்னும் அவதிப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசியையே கோவிட் வைரஸ் தொற்றுக்கு எதிரான ஒரே ஆயுதமாக உலக நாடுகள் நம்பி வருகின்றன. அனைத்து நாடுகளும் தங்களது குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் யுனைடெட் கிங்டமில் (United Kingdom) டேட்டிங் ஆப்கள், அரசுடன் இணைந்து அங்கு நடந்து வரும் தடுப்பூசி இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு புதிய பிரச்சாரத்தை துவக்கி உள்ளன.

இதன்படி டேட்டிங் ஆப்கள் தங்கள் யூஸர்கள் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் என்றால், அதை வெளிப்படுத்த சிறப்பு ஸ்டிக்கர்கள், பேட்ஜ்கள் மற்றும் போனஸ் ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளன. இப்போது பிரிட்டனில் உள்ள ஆன்லைன் டேட்டர்கள் தங்கள் ப்ரொஃபைலில் கோவிட் தடுப்பூசி பேட்ஜை வெளிப்படுத்தலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனை தளமாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுடன் டேட்டிங் செல்ல விரும்பவில்லை என சுமார் 60% அதிகமானோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் இல்லை என்று சொன்னவர்களை விட, தடுப்பு மருந்து எடுத்து கொண்டவர்களை டேட்டிங் செய்வதையே பலர் விரும்புவதும் தெரிய வந்தது. எனவே டிண்டர், மேட்ச், கீல், பம்பிள், பேடூ, அவர் டைம் மற்றும் முஸ்மாட்ச் போன்ற டேட்டிங் ஆப்கள் அனைத்தும் யுனைடெட் கிங்டம் அரசுடன் இணைந்து நாட்டில் தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. டேட்டிங் ஆப்கள் முன்னெடுத்துள்ள இந்த புதிய முயற்சி நாட்டின் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்கு ஒரு “நம்பமுடியாத சொத்து” என்று பிரிட்டன் அமைச்சர் நாதிம் ஜஹாவி மேற்கோளிட்டுள்ளார்.

Also read... பறவைகள் தேடும் முதியவர் லியோனார்டோ - யார் இவர்?

இவற்றில் சில டேட்டிங் ஆப்கள் தங்கள் ப்ரொஃபைலில் கோவிட் தடுப்பூசி பேட்ஜை சேர்க்கும் யூஸர்களுக்கு ஃப்ரீ கிரெடிட்ஸ் அல்லது ப்ரொஃபைல் பூஸ்ட்ஸ், விரிச்சுவல் ரோஸ் கொடுப்பது, சூப்பர் லைக்குகள் போன்ற பிரீமியம் அம்சங்களுக்கான அணுகல் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Bumble டேட்டிங் ஆப், அதன் உறுப்பினர்களுக்கு சமூக தூரத்தைப் பற்றிய பார்வைகள், மாஸ்க் அணிவது மற்றும் யூஸர்கள் நெரிசலான இடங்களில் சந்திப்பதற்கு வசதியாக இருக்கிறதா போன்ற தொற்று டேட்டிங் விருப்பங்களை ஷேர்ஸ் செய்து கொள்ள உதவும். இருப்பினும் தடுப்பூசி போட்டு கொண்டதாக டேட்டிங் ஆப்பில் பேட்ஜை காண்பிக்கும் யூஸர்கள் உண்மையிலேயே தடுப்பூசியை போட்டு கொண்டார்களா இல்லையா என்பதை சரிபார்க்க எந்த வழியும் இல்லை என்றே கருதப்படுகிறது. மேலும் தங்களது யூஸர்கள் அவர்களது ப்ரொஃபைலில் தடுப்பூசி போட்டு கொண்டதாக அப்டேட் செய்து வரும் நபர்களின் எண்ணிக்கையில் சீரான அதிகரிப்பு இருப்பதாக Bumble தெரிவித்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dating apps, UK

அடுத்த செய்தி