Home /News /trend /

வெறும் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட விமானம் இப்போது சொகுசு பார் - கோடிகளில் குவிகிறது வருமானம்

வெறும் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட விமானம் இப்போது சொகுசு பார் - கோடிகளில் குவிகிறது வருமானம்

British Airways Plane Bar

British Airways Plane Bar

Lavish plane Bar | அழகான பார், சொகுசான இருக்கை வசதிகள், அம்சமான தோற்றம் என அனைத்து வகையிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கக் கூடியதாக இந்த விமானம் இருக்கிறது.

பொதுவாக நம்மூரில் ஓடாமல் நின்று போன கார், டெம்போ, வேன், சில சமயங்களில் பேருந்துகளை கூட சீரமைத்து, அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து சாலையோர உணவகக் கடைகளாக நடத்தி வருவதை நாம் கண்ணெதிரே பார்த்திருப்போம். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இது போன்ற பழைய வாகனங்களில் எண்ணற்ற அழகூட்டும் பணிகளை செய்து, சகல வசதிகளுடன் உணவகங்களை சிலர் நடத்தி வருகின்றனர்.

ஆனால், ஒரு முழு விமானமும் இதுபோல மாற்றி வடிவமைக்கப்பட்டு, அதில் பார் செயல்பட்டு வரும் செய்தி நமக்கு மிகவும் புதிது. அதிலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை, வெறும் நூறு ரூபாய்க்கு வாங்கி, அதன் மூலமாக கோடிக்கணக்கில் வருவாய் ஈட்ட முடிகிறது என்றால் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது.

ஏதோ இரண்டாம் தர நிறுவனத்தின் விமானம் இந்த விலைக்கு வந்திருந்தால் கூட அது நம்பும் படியாக இருக்கும். ஆனால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் இந்த விலைக்கு கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.



மிகவும் சேதமடைந்த நிலையில் வாங்கப்பட்ட அந்த விமானம், தற்போது சொகுசு வசதிகளை கொண்ட பார் ஆக மாற்றப்பட்டுள்ளது. இங்கு தனிநபர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொண்டாட்டங்கள் வரையில் அனைத்து விதமான பார்ட்டிகளும் நடைபெறுகின்றன.

Also Read : வைரலாகும் சிறுமியின் அழகிய வெட்கம்... வீடியோ

தற்போது இங்கிலாந்தின் கோட்ஸ் வால்ட் விமான நிலையத்தில் இந்த சொகுசு பார் விமானம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விமானம் வெறும் ஒரு யூரோ மதிப்புக்கு வாங்கப்பட்டதாகும். அதாவது, இந்திய மதிப்பில் இது ரூ.102 ஆகும்.



விமானத்தில் உள்ள இடத்தை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1 லட்சம் என்ற அடிப்படையில் வாடகைக்கு விடுகின்றனர். முன்னதாக, விமானத்தின் உள்ளே இட வசதியை ஏற்படுத்தவும், அதன் தோற்றத்தை அழகானதாக மாற்றவும், ஏராளமாக செலவு செய்து வடிவமைத்தனர். விமானத்தை அழகூட்டும் பணிகளுக்காக ஏறத்தாழ ரூ.5 கோடி வரை செலவானதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி நடத்த விரும்பும் யார் ஒருவரும் இந்த சொகுசு பார் விமானத்தை வாடகைக்கு எடுத்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம்.

Also Read : டிஸ்னி பொம்மைகள் சேகரிப்பில் புதிய சாதனை படைத்த கேரள பெண்.!

கோட்ஸ் வால்ட் விமான நிலைய முதன்மை செயல் அதிகாரி முன்னாள் சுன்னாஹ் ஹார்வே இந்த விமானத்தை வாங்கி இதுபோல சொகுசாக மாற்றி வைத்திருக்கிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது தனது சேவையை நிறுத்திக் கொண்ட இந்த விமானம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திடமிருந்து இவருக்கு விற்கப்பட்டது.



உண்மையில் கற்பனை செய்ய முடியாத ஓர் அழகான சொகுசு விமானத்தின் உரிமையாளராக இருப்பதில் தாம் பெருமை அடைவதாக அவர் கூறுகிறார்.

Also Read : மகளுக்காக தந்தை செய்த செயல் - கண்கலங்க வைக்கும் புகைப்படம்

அழகான பார், சொகுசான இருக்கை வசதிகள், அம்சமான தோற்றம் என அனைத்து வகையிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கக் கூடியதாக இந்த விமானம் இருக்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Plane, Trending

அடுத்த செய்தி