சிறைக்கம்பிகளுக்கு பதிலாக ஜன்னல்கள், அங்கே அமர்ந்த படி கைதிகள் பரந்து விரிந்த வானத்தையும், பசுமையான புல்வெளிகளையும் கண்டு ரசிக்கலாம் இப்படியொரு சிறைச்சாலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இது கதையல்ல நிஜம், உண்மையாகவே இப்படியொரு சிறைச்சாலை இருக்கிறது. எங்கே என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கைதிகளை 'குடியிருப்பாளர்கள்' மற்றும் செல்கள் 'அறை' என்று அழைப்பதில் இருந்து, இந்த UK வசதி, சிறைச்சாலைகள் உணரப்படும் விதத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறைச்சாலைகள் என்பது குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்கச் செல்லும் இடங்கள், நாம் பொதுவாக சினிமாவில் பார்த்த அல்லது கேள்விப்பட்ட சிறைச்சாலைகளை வைத்து நாம் அனைவரும் புரிந்து கொண்டது என்னவென்றால், உயிர்வாழ்வதற்கு எளிதான இடம் அல்ல என்பதுதான். இருப்பினும், இங்கிலாந்து அரசு அதை மாற்ற விரும்புகிறது.
'மெகா-ஜெயில்' முதன்முதலில் மற்ற சிறைகளில் இருந்து தனித்து நிற்கும் சிறை விதிகளைக் கொண்டுள்ளது.
லண்டனில் உள்ள சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிறைகளில் ஒன்று, வெலிங்பரோ பகுதியில் நார்தாம்ப்டன்ஷையர் HMP ஃபைவ் வெல்ஸில் அமைந்துள்ளது. சிறைச்சாலைகளில் உள்ள கம்பிகளை அகற்றிவிட்டு, ஹாஸ்டலில் தங்கியிருப்பதை போன்ற ஜன்னல்களை கொண்ட முதல் சிறைச்சாலை இது தான். HMP ஃபைவ் வெல்ஸில் முதல் கைதி கடந்த மாதம் வந்து சேர்ந்த நிலையில், தற்போது மொத்த கைதிகளின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.
Also Read : திருமணத்திற்காக பெண் தேடிய லண்டன் வாழ் இந்தியரின் வித்தியாசமான விளம்பரம் வைரல்!
இங்குள்ள ஊழியர்கள், சிறை குறித்த கைதிகளின் முந்தைய அனுபவங்களை சரி செய்வதில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் கைதிகளை 'குடியிருப்பாளர்கள்' என்றும், அவர்களின் செல்களை 'அறைகள்' என்றும் அழைக்கின்றனர். இந்த முயற்சிக்கான காரணம் என்னவென்றால், கைதிகள் மீது மென்மையான அணுகுமுறையை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் அளவை குறைக்கவும், சிறை பற்றிய பயங்கரமான அனுபவத்தை இயல்பாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
Also Read : இரு கைகளையும் பயன்படுத்தும் திறன் இருந்தால் என்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் சச்சின்!
கைதிகள் தங்களது பிள்ளைகளின் பள்ளி படிப்பில் உதவுவதற்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களை கொண்ட விளையாட்டு மைதானத்தை உள்ளடக்கிய குடும்ப பிரிவு மற்றும் ஹோம் ஒர்க் கிளப் உள்ளது. இதன் மூலம் தங்களது குழந்தைகளின் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு போன்ற பள்ளி நிகழ்வுகளில் கைதிகள் வீடியோ கால் மூலமாக பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
1,700 பேரை தங்க வைக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையில், முடிதிருத்தகம், பைக் பழுது பார்ப்பது, கார் பராமரிப்பு, பிளம்பிங் மற்றும் பிரிண்டிங் போன்ற 24 பயிற்சி பட்டறைகள் செயல்படுகின்றன. மேலும் குடியிருப்பாளர்கள் நாய்களுடன் செல்லப்பிராணி சிகிச்சைகளில் பங்கேற்க வசதியாக 'பெட் தெரபி' அமர்வுகளும் உள்ளன.
Also Read : இண்டர்வியூக்கு வருபவர்களிடம் கூகுள் எப்படி கேள்வி கேட்கும் தெரியுமா?
இது சந்தர்ப்பவசத்தால் தவறு செய்தவர்களை மேலும் கொடியவர்களாக மாற்றும் இடமாக இல்லாமல், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து, புதிய வாழ்க்கையை தொடங்க உதவும் இடமாக அமைகிறது. இந்த சிறைச்சாலையின் நடவடிக்கையின் மூலமாக கைதிகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள், வேலை, உறவுகளுடன் தொடர்பு போன்றவை கிடைப்பதால், மீண்டும் தவறிழைக்கும் எண்ணம் குறையும் என நம்பப்படுகிறது.
Also Read : விமானத்திற்குள் இளம் பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்... தாறுமாறு வைரலாகும் வீடியோ!
சிறையின் பொறுப்பாளரான ஜான் மெக்லாலின் கூறுகையில், "மக்கள் மதிப்புமிக்கவர்களாக உணர விரும்புகிறார்கள். இங்கு சிறையில் இருக்கும் அனைவரும் ஒரு கட்டத்தில் விடுவிக்கப்படுவார்கள், அப்போது அவர்கள் சமூகத்தின் காவலர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இங்கிருந்து செல்லும் போது அவர்கள் ஏதோ மதிப்புள்ளவர்கள் என்று உணர்கிறார்கள். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.