இந்தியாவில் திருமண சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பரபரப்பான நாட்களில் திருமணங்களில் பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் தவிர பல ஆக்கபூர்வ நிகழ்வுகளும் காணப்படுகின்றன.
திருமணத்தில் மணமக்களின் நடனம் மட்டுமல்லாது, குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு நடனமாடுகிறார்கள். அந்த இடத்தையே மகிழ்ச்சியால் நிரம்ப செய்து விடுகிறார்கள். திருமண ஊர்வலம் கொண்டாடுவது மட்டுமல்லாமல், மணமகளின் தரப்பு மக்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள்.
ஒருவரின் திருமணம் அவர்களின் அன்புக்குரியவர்களின் முழு பாசம் மற்றும் அரவணைப்பு இல்லாமல் ஒருபோதும் நிறைவடையாது. இந்நிலையில் ஒரு வீடியோ மூலம் பல இதயங்களை தொட்ட உணர்ச்சியை சிம்ரன் பலார் காஃபியா ஜெயின் (Simran Balar Khabiya Jain) என்ற மணமகள் தனது இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்து இருக்கிறார். சமீபத்தில் தனது திருமணத்தை நிறைவு செய்த சிம்ரன் தனது திருமண நிகழ்வு மற்றும் அதற்கு வந்த தனது அன்புக்குரியவர்களின் நினைவை பாதுகாக்க ஏதாவது வித்தியாசமான வழி இருப்பதை உறுதிப்படுத்த விரும்பினார்.
இதற்காக அவர் எடுத்து கொண்ட முயற்சி உண்மையிலேயே மனதை கவரும் விதமாக இருக்கிறது. தனது திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோவை புதுப்பெண் சிம்ரன் இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் மணமகள் சிம்ரன் பலார் ஆடம்பரமான டிசைன் கொண்ட லெஹன்காவை அணிந்து கொண்டுள்ளார். சிம்ரனின் திருமண லெஹங்காவில் அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் உட்பட அவரது அன்புக்குரியவர்கள் கையெழுத்திடுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
இந்த விடியோவை ஷேர் செய்து, "இது மிகவும் சிறப்பு வாய்ந்த எனது திருமண லெஹங்கா. நீங்கள் கவனித்தீர்களா.! எனது லெஹங்கா பல ஜன்னல்களால் சூழப்பட்டு உள்ளது. நான் இந்த லெஹெங்காவைத் தேர்ந்தெடுக்கும் போது எனது குடும்பத்தினர் அதில் கையெழுத்திடும் வகையில் ஒரு விண்டோ கட் அவுட் செய்யும்படி கேட்டிருந்தேன். அதில் தான் திருமணத்தன்று எனது குடும்பத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். எனது இந்த திருமண லெஹெங்கா எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
View this post on Instagram
சுமார் 7.9 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸை கொண்ட சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸரான சிம்ரன் பலார் ஷேர் செய்த இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இவர் உடல்நலம் முதல் நிதி வரையிலான பல்வேறு தலைப்புகளின் ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஃபாலோயர்ஸ் இடையே பிரபலமாக உள்ளார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் எழுதி கையெழுத்திடும் வகையில் மணமகள் சிம்ரன் பலார் காஃபியா ஜெயின் தனது ஆடையை வடிவமைத்து உள்ளார். இவர் திருமணத்திற்கு தயாராகும் போது, பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் மட்டுமின்றி, பல குடும்ப உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர்.
Also Read : 3.5 கோடி சம்பள வேலையை தூக்கி எறிந்த Netflix ஊழியர்.. காரணம் என்ன தெரியுமா?
இப்போது இந்த லெஹங்கா அவருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மணமகளின் இந்த வித்தியாச ஸ்டைல் லெஹங்காவை நெட்டிசன்கள் தற்போது பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த திருமண லெஹெங்கா வீடியோ இன்ஸ்டாவில் இதுவரை 3.9 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பெரும்பாலான இன்ஸ்டா யூஸர்கள் இந்த லெஹெங்காவின் பின்னணியில் உள்ள யோசனையையும் அது பாதுகாக்கும் அழகான நினைவுகளையும் பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Viral Video