மணப்பெண்ணின் சேலை பிடிக்கவில்லை என மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை..!

மணப்பெண்ணின் சேலை பிடிக்கவில்லை என மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை..!
  • Share this:
மணமேடை வரை வந்த கல்யாணம் பலதரப்பட்ட காரணங்களால் நின்று போனதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் மணமகளின் சேலை சரியில்லை என்று திருமணம் தடைப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.

இந்த சம்பவம் கர்நாடகாவின் ஹாசன் என்ற கிராமத்தில் தான் நடந்து உள்ளது. பி.என்.ரகுமார் மற்றும் பி.ஆர்.சங்கீதா  இருவரும் அதே கிராமத்தை சேர்ந்தவரகள். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரும் இவர்கள் காதலுக்கு பச்சை கொடி காட்ட இவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

ரகுகுமார் - சங்கீதா ஜோடிக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்காக பெண் வீட்டார் எடுத்த சேலை தரமாக இல்லை, அதை மாற்ற வேண்டும்  என்று மாப்பிள்ளை வீட்டார் கூறி உள்ளனர். ஆனால் அதனை ஏற்க பெண்வீட்டார் மறுத்துவிட்டனர்.


இதனால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு முதல் நாள் திருமண மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இது தொடர்பாக பெண் வீட்டார் மாப்பிள்ளை மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading