Home /News /trend /

மணமகன் சேலையில், மணமகள் வேட்டியில் -  பராம்பரிய பழங்குடி திருமண சடங்கின் ஆச்சரிய தகவல்கள்

மணமகன் சேலையில், மணமகள் வேட்டியில் -  பராம்பரிய பழங்குடி திருமண சடங்கின் ஆச்சரிய தகவல்கள்

வடக்கு ஆந்திரா பகுதியில் திருமண விழாவில் மணமகன் சேலையும், மணமகள் வேட்டியும் அணிந்து மாறுவேடம் கொள்ளும் விநோத சடங்கு பின்பற்றப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்தியாவில் விநோதமான திருமண சடங்குகள், பாரம்பரியங்கள் ஆங்காங்கே நடைபெறுவது வழக்கம். அதேபோல், ஆந்திரா மாநிலம் அமராவதியில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், மணமகன் சேலை, வளையல் ஆகியவற்றுடன்  திருமண  நிகழ்வில் வந்து நின்றது பலரையும் ஆச்சரியத்தில்  ஆழ்த்தியுள்ளது.

    யோகேந்திர பாபு என்ற அந்த மணமகன், பட்டு  வேட்டிக்கு  பதிலாக பட்டு சேலை உடுத்தி, தலையில் சவுரி முடி அணிந்து, பூச்சூடி, கைகளில் வளையல் அணிந்து, கண்களுக்கு மையிட்டு, உதட்டுக்கு லிப் ஸ்டிக் போட்டுக்கொண்டு அச்சு அசல் மணப் பெண்ணாகவே வேடமணிந்து தோற்றமளித்தார்.

    இந்த விநோதமான திருமண சடங்கு பிரகாசம் மாவட்டத்தில் மட்டுமல்லாது வடக்கு ஆந்திராவில் உள்ள அனைத்து பழங்குடி மக்களிடமும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. மணமகன் எப்படி மணப்பெண் கோளம் கொண்டுள்ளாரோ, அதேபோல் மணப் பெண்ணும் பதிலுக்கு மணமகன் போல  வேட்டி  கட்டி மாற்று  வேடம் அணிவாராம்.  இந்த விநோத சடங்கு குறித்து மணமகனின் தந்தை நாலி ராமைய்யா கூறுகையில், தங்களின் குல தெய்வமான குருப்புடு சாமியை வேண்டி இந்த திருமண சடங்கை தவறாமல் நாங்கள் நடத்துவோம்.

    இந்த மாற்று வேடத்துடன் மணமக்கள் இருவரும்  கோயிலுக்கு  சென்று வழிபட்டு,மணமகன் மணமகள் நெற்றியில் திலகமிடுவார். பின்னர், இருவரும் ஊரில் உள்ள வன்னி மரத்தை வழிபட்டு அதற்கு பூஜைகளை நடத்துவார்கள். இதன் மூலம் மணமக்கள் மகிழ்ச்சியான வாழ்வையும், ஆரோக்கியமான குழந்தைகளையும் பெறுவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.
    Published by:Kannan V
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி