• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மணப்பெண் அணிந்து வந்த 60 கிலோ நகை - அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த திருமணம்!

மணப்பெண் அணிந்து வந்த 60 கிலோ நகை - அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த திருமணம்!

மணப்பெண் அணிந்து வந்த 60 கிலோ நகை

மணப்பெண் அணிந்து வந்த 60 கிலோ நகை

இதனால் அந்தப் பெண்ணால் இயல்பாக நடக்க முடியவில்லை. 60 கிலோ தங்கத்தின் எடையை யோசித்துபாருங்கள்

  • Share this:
சீனாவின் வருங்கால கணவர் பரிசாக கொடுத்த 60 கிலோ நகையையும் திருமணத்தன்று மணப்பெண் ஒருவர் அணிந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அரசர் காலம் முதல் இன்று வரை தங்கத்தின் மீதான மதிப்பும், மோகமும் குறைந்தபாடில்லை. சுப நிகழ்ச்சிகளில், குறிப்பாக திருமணத்தன்று தங்கம் அணிவது என்பது கலாச்சாரமானதாகவும், மங்களகரமானதாகவும் இன்றளவும் உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. இந்திய திருமணங்களில் மணப்பெண் மட்டுமல்லாது, உறவினர்கள் கூட தங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அணிந்து வருவதை பார்க்க முடியும். மணப்பெண்களுக்கு கிராம் முதல் கிலோ கணக்கு வரை தங்க நகைகளை அணிவிப்பார்கள்.

ஆனால், சீனாவில் மணப்பெண் ஒருவர் அணிந்து வந்த தங்கம் காண்போரை கிறுகிறுக்க வைத்துள்ளது.திருமணத்தன்று சுமார் 60 கிலோ தங்க நகைகளை அவர் அணிந்து வந்து, வருங்கால கணவரை கரம் பிடித்துள்ளார். என்ன 60 கிலோ தங்க நகைகளா? வாய்மேல் கை வைக்க வேண்டாம். இது உண்மை தான். வருங்கால கணவர், தனது மனைவியின் மீது கொண்ட பிரியம் காரணமாக 60 கிலோ நகைகளை பரிசளித்துள்ளார். கணவரின் பிரியத்தை போற்றும் வகையில், திருமணத்தன்று அவர் கொடுத்த அனைத்து நகைகளையும் அணிந்து வந்து அவருக்கே சர்பிரைஸ் கொடுத்துவிட்டார்.

இந்த சம்பவம் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற அந்த திருமணத்தில் மணப்பெண் வெள்ளை நிற உடை அணிந்திருக்கிறார். கைகளில் பூச்செண்டு ஒன்றை பிடித்திருக்கும் அந்தப் மணப்பெண்ணின் கழுத்து முழுவதும் தங்க ஆபரணங்கள் பல்வேறு வடிவங்களில், ஆபரணமாக செய்யப்பட்டு ஜொலிக்கிறது. 60 கிலோ தங்கமும் கழுத்து முதல் இடுப்பு வரை தொங்கவிடப்பட்டிருந்தது.

இதனால் அந்தப் பெண்ணால் இயல்பாக நடக்க முடியவில்லை. 60 கிலோ தங்கத்தின் எடையை யோசித்துபாருங்கள். அதனைப் போட்டுக் கொண்டு திருமண நாளில் உலாவுவது என்பது சாதரண விஷயமா?. இந்நிலையில், அந்த தம்பதியின் வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வைரலாகியுள்ளது.

Also read... துர்கா தேவிக்கு 45 அடி உயர ‘பிரம்மாண்ட’ சிலை - ஹைதராபாத்தில் கோலாகலம்!

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், இருவரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மணமகளுக்கு சீதனமாக சுமார் 60 நெக்லஸ்கள், இரண்டு வளையல்கள் என கொடுத்துள்ளார். அவற்றை அணிந்துகொண்டு மணமகளால் திருமண சடங்குகளை செய்ய முடியவில்லை. இது அங்கிருந்த விருந்தினர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் மணப்பெண்ணிடம் சென்று, தான் உதவுவதாக கூறியபோதும், புன்னகைத்த அந்த மணப்பெண், தான் நார்மலாக இருப்பதாகவும், திருமணச் சடங்குகளில் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சீனாவில் பெரும்பான்மையான நகரங்களில் பெண்களுக்கு சீதனம் கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: