• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Viral video : திருமண நாளில் 100 கிலோ எடையுள்ள லெஹங்காவை அணிந்த மணப்பெண் -வைரலாகும் வீடியோ

Viral video : திருமண நாளில் 100 கிலோ எடையுள்ள லெஹங்காவை அணிந்த மணப்பெண் -வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

பாகிஸ்தான் பெண் ஒருவர் 100 கிலோ எடை லெஹங்காவை திருமண நாளில் அணிந்திருக்கும் வீடியோ இணையத்தில் ஓராண்டுக்குப் பின் மீண்டும் வைரலாகியுள்ளது.

  • Share this:
திருமணங்கள் எப்போதும் ஸ்பெஷலான ஒன்று. ஆடை, அணிகலன்கள் முதல் உணவு, உபசரிப்பு வரை எல்லாமே பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். ஆபரணங்கள் மின்ன, உடை பிரம்மாண்டமாகவும், வித்தியாசமான ஸ்டைலில் இருக்க வேண்டும் என மணப்பெண்ணும், மணமகனும் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். ஒரு ஆண்டுக்கு முன்பே உடையை தேர்வு செய்து, அதனை பிரத்யேகமாக வடிவமைத்து திருமண நாளில் அணிபவர்களும் இருக்கிறார்கள்.

அத்தகைய அலங்காரங்கள் திருமணத்துக்கு வருபவர்களை மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் கவனத்தை பெற்றுவிடும்.அந்தவகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமண நாளன்று அணிந்த உடை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த ஆண்டே சமூகவலைதளங்களில் பதிவிட்டப்பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.



அந்த வீடியோவில் திருமண உடையில் இருக்கும் பெண், பலரும் ஆச்சர்யப்படும் வகையில் 100 கிலோ எடையுடைய லெஹங்காவை அணிந்துள்ளார். பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் அந்த லெஹங்கா சிவப்பு நிறத்தில் உள்ளது. டிசைன்கள் கைகளாலேயே எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. திருமண மேடையில் மணப்பெண் அமர்ந்திருக்கும்போது, அந்த இடம் முழுவதும் லெஹங்கா பரந்துவிரிந்துள்ளது. மணப்பெண்ணுக்கு இணையாக மணமகனும் கோல்டன் ஷெர்வாணி மற்றும் மரூன் டர்பன் அணிந்துள்ளார்.

Also Read : செஞ்சி வச்ச சிலை போல் நிற்கும் ஷிவானி நாராயணன்..



இந்தப் பிரம்மாண்ட லெஹங்காவைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்துள்ளனர். இவ்வளவு பெரிய உடையை எவ்வளவு நாள் தயாரித்திருப்பார்கள்? அழகாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என ஒரு சிலர் கூற, சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனமும் செய்துள்ளனர். ஒரே ஒருநாளுக்காக இவ்வளவு ஆடம்பரம் தேவையா? இந்த உடையை வேறெங்காவது அணிந்து செல்ல முடியுமா? வீண் செலவு என கமெண்டுகளில் திட்டியுள்ளனர். தங்களின் திருமணம் இணையத்தில் கவனம் பெற வேண்டும் என்பதற்காகவே தம்பதிகள் திட்டமிட்டு உடையை தேர்வு செய்திருக்கிறார்கள் எனவும் சிலர் கூறியுள்ளனர்.

Also Read : கர்ப்ப கால புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சீரியல் நடிகை ஃபரீனா..


விமர்சனங்களும், பாராட்டுகளும் இருந்தாலும், தம்பதிகள் இருவரும் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில் தங்களது திருமணத்தை நடத்தியுள்ளனர். இந்த வீடியோ கடந்த ஆண்டே இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. இந்தியாவிலும் பிரம்மாண்டமான திருமணங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன.



அம்பானியின் மகள் இஷா திருமணம் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக இருந்த கிளிண்டன் முதல் பல்வேறு நாட்டு அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். ஆடம்பரத்துக்கும், ஆடல் பாடல்களுக்கும் குறைவில்லாமல் அந்த திருமணம விழா இருந்தது. 2016 ஆம் ஆண்டு கர்நாடக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி சுமார் 500 கோடி ரூபாய் செலவில் தன் மகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். அதனை விஞ்சும் வகையில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஸ்ரீராமலு, தன்னுடைய மகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: