Home /News /trend /

மலர்களை வீசி மணமகள் உற்சாகம்.. விருந்தினர்களுக்கு ஷாக் - வைரலாகும் வீடியோ

மலர்களை வீசி மணமகள் உற்சாகம்.. விருந்தினர்களுக்கு ஷாக் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

திருமண சடங்குகள் நடக்கும் வேளையில் மணப்பெண் மலர்களை தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்

    மணக்கோலத்தில் இருக்கும் மணப்பெண் ஒருவர் மணமேடையில் மலர்களை தூவி வீசும் வீடியோ ஒன்று நெட்டிசன்களை கவர்ந்துள்ளது

    திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணம். இந்த திருமணம் ஒவ்வொரு நாட்டிலும் விதவிதமாக நடக்கிறது. திருமணத்தை நடத்தி முடிப்பது ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுவும் இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் சடங்கு, சம்பிரதாயங்கள் என ஏராளமான ட்விஸ்ட்கள் இருக்கும். திருமண நிகழ்வின் போது வேடிக்கையான சில விளையாட்டுகளும் நடக்கத் தான் செய்கின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்புகூட திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. கோபமாக இருக்கும் மாப்பிள்ளை மணமகள் மீது மாலையை தூக்கி வீசினார். அந்தப்பெண் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். நெட்டிசன்கள் அந்த மணமகனை இணையத்தில் வறுத்தெடுத்தனர். அதேபோல் மாலை அணிவிக்க வந்த மணமகனுடன் மணப்பெண் கபடி ஆடும் வீடியோ ஒன்று வெளியானது.

     




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் மணக்கோலத்தில் இருக்கும் மணப்பெண் ஒருவர் மணமேடையில் மலர்களை தூவி வீசும் வீடியோ ஒன்று நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில், மணமேடையில் திருமண சடங்குகள் நடக்கும் வேளையில் மணப்பெண் மலர்களை தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். மாப்பிள்ளையும் அந்தப்பெண்ணை ஒரக்கண்ணில் ரசிக்கிறார். இன்ஸ்டாகிராமில் பதிவான இந்த வீடியோவுக்கு 5 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. கடைசியில் தான் கேப்ஷனை படித்துள்ளார். அது ஷூட்டிங்குக்காக எடுக்கப்பட்ட வீடியோ. இருந்தாலும் அந்தப்பொண்ணு சிரிப்பு அவ்ளோ அழகா இருக்குதுன்னு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bride tips, Grooming tips, Trending, Viral Video

    அடுத்த செய்தி