முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த கிஃப்டை கடுப்பில் தூக்கி வீசிய மணப்பெண்...

மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த கிஃப்டை கடுப்பில் தூக்கி வீசிய மணப்பெண்...

kerala bride viral  video

kerala bride viral video

கிஃப்டை பார்த்து மணப்பெண்ணின் முகம் கோவத்தில் சிவந்துவிட்டது, இதனை பார்த்த நண்பர்கள் மீண்டும் உற்சாகத்தில் கத்தி கூப்பாடு போடுகின்றனர்.

  • Last Updated :

திருமண நிகழ்வில் மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த கிஃப்டை பார்த்து கடுப்பான மணமகள் அதை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

இந்தியாவில் திருமணம் என்றாலே அதில் கொண்டாட்டம், உற்சாகமும் அடங்கியிருக்கும். திருமணம் செய்துகொள்வோரில் குறிப்பாக மாப்பிள்ளையின் நண்பர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது. சில நேரங்களில் உற்சாகத்தில் எல்லை மீறி நடக்கும் சம்பவங்கள் திருமண அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்துவிடும். குறிப்பாக மாப்பிள்ளை அல்லது பெண்ணை கிண்டலடித்து நண்பர்கள் செய்யும் லூட்டி மணமேடையில் திருமண ஜோடிக்கு சங்கடத்தையும் ஏற்படுத்துவதுண்டு..

அது போல, ஒரு சம்பவம் கேரளாவில் அரங்கேறியிருக்கிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற திருமணம் ஒன்றில் மாப்பிள்ளையின் நண்பர்கள் உற்சாகத்தில் எல்லை மீறி செய்த செயலால் மணப்பெண் கடுப்படைந்து அவருக்கு அளிக்கப்பட்ட கிஃப்டை தூக்கி ஏறிந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Also Read:   தனுஷின் ‘சுள்ளான்’ பட பாணியில் மெட்ரோ ரயிலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.

அந்த வைரல் வீடியோவில், மணமகணும், மணப்பெண்ணும் மேடையில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது திருமண ஜோடியை வாழ்த்துவதற்காக மாப்பிள்ளையின் நண்பர்கள் கும்பலாக மேடையேறி வருகின்றனர்.

வாழ்த்திய அவர்கள் ஆரவாரத்துடன் மணப்பெண்ணுக்கு கிஃப்ட் ஒன்றை அளிக்கின்றனர். மணப்பெண்ணோ அந்த கிஃப்டை உடனடியாக பிரித்து பார்க்கிறார். அதில் குழந்தைகளுக்கு பாலூட்டும் பீடிங் பாட்டில் இருந்தது. கிஃப்டை பார்த்து மணப்பெண்ணின் முகம் கோவத்தில் சிவந்துவிட்டது, இதனை பார்த்த நண்பர்கள் மீண்டும் உற்சாகத்தில் கத்தி கூப்பாடு போடுகின்றனர். . ஆனால், கடுப்பில் இருந்த மணப்பெண் கிஃப்டை தூக்கி எறிந்துவிடுகிறார்.

Also Read:   மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

மீண்டும் அந்த கிஃப்டை எடுத்து ஒருவர் மணப்பெண்ணின் மடியில் வைக்கிறார். மேற்கொண்டு மணப்பெண் விபரீதமாக ஏதும் செய்வதற்குள் சுதாரித்துக் கொண்ட அவரின் அருகிலிருந்த ஒருவர் அந்த கிஃப்டை எடுத்து வைத்துக் கொள்கிறார்.

சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வரும் இந்த வீடியோவை தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதுடன் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

திருமணத்தின் போது மாப்பிள்ளை, மணப்பெண் இருவரின் முகமும் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும், இது போல உற்சாக மிகுதியில் சிலர் எல்லை மிறி செய்யும் செயல் அவர்களை சங்கடப்படுத்தி விடுகிறது. பிறரின் மனதை புண்படுத்தாமல் திருமண கொண்டாட்டங்களில் ஈடுபடலாமே என சிலர் அட்வைஸ் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    மணப்பெண் கிஃப்டை தூக்கி எறிந்த நிகழ்வுக்கு உங்களின் கமெண்ட் என்ன என்பதையும் பதிவிடுங்கள்..

    First published:

    Tags: Kerala, Marriage, Trending, Video gets viral, Viral Video