• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மணமேடையில் கபடி விளையாடிய மணப்பெண் - வைரல் வீடியோ

மணமேடையில் கபடி விளையாடிய மணப்பெண் - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

மணமகள், மாலையை அணிந்து கொள்ளாமல், மணமேடையில் கபடி ஆடுவது போல சிரித்துக்கொண்டே பின்வாங்கினார்.

  • Share this:
இந்தியத் திருமணங்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றவை. மணப்பெண் மற்றும் மணமகன் வீட்டார் என்று இருவர் வீட்டிலும் ஏகப்பட்ட சடங்குகள் உள்ளன. ஒரு திருவிழா போல கொண்டாடப்படும் திருமணங்களில், ஒவ்வொருவரும், மூத்தவர்கள் உட்பட, திருமணத்தை மிகச்சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்வதுண்டு.

இப்போது ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது என்றாலே, இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் முழுவதும், புகைப்படங்களும், வீடியோக்களும், திருமண நிகழ்வுகளும் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக, திருமண சடங்குகளில் செய்யப்படும் வேடிக்கையான செயல்கள் மிகவும் வைரல் ஆகின்றன. அதைப் போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

Also Read :  மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ

திருமண நிகழ்வில் மாலை மாற்றும் சடங்கு மிகவும் முக்கியமானது. ஒரு சில பாரம்பரிய திருமணங்களில், மாலைகள் மாற்றும் போதே மணமகன் மற்றும் மணமகளை மறைப்பது, தூக்கிப் பிடிப்பது போன்ற வேடிக்கையான செயல்கள் நடைபெறும். அதே போன்று மாலை மாற்றும் சடங்கில் கபடி ஆடிய மணப்பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வில், முதலில் மணப்பெண், மனமகளுக்கே உரிய லேசான வெட்கத்துடன், அமைதியாக மணமகனுக்கு மாலையை அணிவித்து வந்தார். மணமகன் தன் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி மணமகளுக்கு அணிவிக்க முன்வரும் போது, அந்த வேடிக்கையான சம்பவம் நடந்தது. மணமகள், மாலையை அணிந்து கொள்ளாமல், மணமேடையில் கபடி ஆடுவது போல சிரித்துக்கொண்டே பின்வாங்கினார். பின், மேடை முழுவதும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்.



மணமகளின் இந்த வேடிக்கையான செய்கையை அனைவரும் ஆரவாரத்தோடு வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவில், அழகான மணப்பெண் தன்னுடைய லெஹங்காவை சரி செய்தபடியே, அங்கும் இங்கும் விளையாட்டு காட்டியதைப் பார்க்கலாம். மணமகளின் இந்த செய்கை, கபடி ஆடுவதைப் போலவே இருந்தது.

Also Read ; உடலுறவில் ஈடுபட்டபோது ஆணுறுப்பு உடைந்த கொடுமை : செங்குத்தாக உடைந்ததால் மருத்துவர்கள் ஷாக்

மணமகன், அவரின் கழுத்தில் மாலையை அணிவிக்க முயற்சி செய்தாலும், அவரால் மணமகளை பிடிக்க முடியவில்லை. நீண்ட நேரம் விளையாட்டு காட்டிய பின்னர், மணமகள் கொஞ்சம் சோர்வடைந்திருப்பார் போல. மேலும், மணப்பெண்ணின் தோழி ஒருத்தி இடையில் வந்தார். அதன் பிறகே, மணமகன் வெற்றிகரமாக அவரின் கழுத்தில் மாலையை அணிவித்தார்.

ஃபேஸ்புக்கில் வைரலான இந்த வீடியோவுக்கு, 24 ஆயிரம் மக்கள் ரியாக்ட் செய்துள்ளனர். திருமணங்கள் என்று வரும் போது, இதைப் போன்ற பல்வேறு வீடியோக்கள் உள்ளன. சமீபத்தில் வெளியான மற்றொரு வீடியோவில், திருமண சடங்கின் மணமகன் தூங்கி வழிந்ததைக் காட்டியது. மணமகள் மிகவும் சுறுசுறுப்பாக அனைவருடனும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, மணமகன் தூங்கி வழிந்தது வைரலாகப் பரவி, நெட்டிசன்கள் அனைவரும் நகைச்சுவையாக பின்னோட்டமிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: