வேறொரு பெண்ணுடன் காதல் - திருமணத்தன்று மணமகனை அறைந்த மணப்பெண்!

மாதிரி படம்

இந்த தகவலை அறிந்த மணமகளின் பெற்றோர் இதுகுறித்து மணமகனின் வீட்டாரிடம் விசாரித்துள்ளார்.

  • Share this:
திருமணத்தன்று மணமகனை அறைந்துவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு மணப்பெண் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மக்களை திகைக்க வைத்துள்ளது. அங்கு புதிதாக திருமணமான மணமகள் தனது மாமியார் வீட்டிற்கு வந்ததும் காரில் இருந்து இறங்கியபின் மணமகனை அறைந்துள்ளார். மேலும் அந்த மணமகள் தனது திருமண லெஹங்காவையும் மாற்றி விட்டு சாதாரண ஆடைகளை அணிந்து தனது பெற்றோரின் வீட்டிற்கு திரும்பிய சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தகவலை அறிந்த மணமகளின் பெற்றோர் இதுகுறித்து மணமகனின் வீட்டாரிடம் விசாரித்துள்ளார். ஆனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் இந்த விஷயம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரு தரப்பினரிடமும் என்ன நடந்தது என விசாரணை நடத்தினர். பின்னர் சமாதானமாக செல்லும்படி அறிவுத்திய நிலையில் இரு தரப்பினரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறையினர், இது ஜான்பூரில் உள்ள குத்தான் என்ற லாவியன் கிராமத்தில் நடந்துள்ளது என தெரிவித்தனர்.

இரு வீட்டாரின் சம்மதத்துன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமண ஊர்வலம், சடங்குகளில் மணப்பெண் உற்சாகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மணமகள் தனது குடும்பத்தினருடன் பிரியாவிடை கொடுத்த நேரத்தில் கூட எதுவும் சொல்லவில்லை. இருப்பினும், மணமகனின் குடும்பத்தினர் மணப்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் செல்லவிருந்தபோது அவர் மணமகனை அறைந்துள்ளார்.

Also read... Burger: பர்கர்ல சிக்கன் ஏன் இவ்வளவு கம்மியா இருக்கு? - ஃபோட்டோ பகிர்ந்த கஸ்டமரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

இந்த வினோதமான சம்பவம் நடந்தபோது மணமகனின் குடும்பத்தினர் தங்கள் புது மருமகளை வீட்டிற்குள் அழைத்துச் செல்லவிருந்த நிலையில், அங்கு நடந்த சம்பவத்தால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்ததாக ஜீ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. புதுமணப்பெண் கணவனை அறைந்த செய்தி முழு கிராமத்திலும் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணமகன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த செய்தி அறிந்த மணமகள் மாப்பிளையை அறைந்தது தெரியவந்துள்ளது. போலீசார் சமாதானம் கூறியும் அவர் மணமகன் செய்த தவறை மன்னிப்பதாக தெரியவில்லை. திருமணம் நடைபெற்ற நன்றே தம்பதிகள் பிரிந்த சம்பவம் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திருமணங்களின் போது இதுபோன்ற குழப்பங்கள் நடப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இதேபோல நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், திருமணத்தின் போது கோபமடைந்த மணமகன், மணமகளை மேடையிலேயே அறைந்துள்ளார். மணமகனின் உறவினர்களில் ஒருவர் மேடையில் ஏற தொடங்கிய பின்னர், மணமகளின் உறவினர்கள் அவர்களை ஏதோ குறை கூறி மேடையில் ஏற எதிர்த்தனர். அதற்கு ஆதரவாக மணமகளும் பேசிய நிலையில், இரு தரப்பினர் இடையே ஒரு சண்டை தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன், புதுப்பெண்ணை ஆராய்ந்துள்ளார். இறுதியில், போலீசார் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையிலான குழப்பத்தை தீர்த்து வைத்து சமாதானப்படுத்தினர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: