• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • திருமணத்தில் நாயுடன் போட்டோஷூட் நடத்திய மணப்பெண்!

திருமணத்தில் நாயுடன் போட்டோஷூட் நடத்திய மணப்பெண்!

வெட்டிங் போட்டோஷூட் என்றாலே மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் தான் சூப்பர் ஸ்டார்ஸ். ஆனால் இங்கு ஒரு திருமணத்தில் மாப்பிள்ளைக்கு பதில் மணப்பெண்ணின் நாய் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளது.

  • Share this:
    திருமணம் என்றாலே கொண்டாட்டமும், குதூகலமும் நிறைந்த திருவிழாவாக மாறிவிடும். அந்த ஒரு நாளுக்காகவே சில மாதங்களாக மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் அவர்களின் சுற்றத்தாரும் தயாராகி வருவது வழக்கம். திருமண நாளை நாம் மீண்டும் திரும்பி பார்க்க, நமக்கு உள்ள ஒரே வழி போட்டோஷூட் தான். திருமண நாளன்று எடுக்கப்படும் போட்டோஷூட்டிற்கு என்று தனி சிறப்பம்சம் எப்போதும் உண்டு.

    வெட்டிங் போட்டோஷூட் என்றாலே மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் தான் சூப்பர் ஸ்டார்ஸ். ஆனால் இங்கு ஒரு திருமணத்தில் மாப்பிள்ளைக்கு பதில் மணப்பெண்ணின் நாய் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த திருமண ஜோடியின் போட்டோஷூட்டில் தான் இப்படியொரு வித்தியாசமான போட்டோஷூட் நடந்துள்ளது.

    ஹனா என்கிற மணப்பெண் தன் செல்ல பிராணியான நாயுடன் தனது திருமண போட்டோஷூட்டை தொடங்கி உள்ளார். இவரின் ஃபர்ஸ்ட் லுக் வெட்டிங் போட்டோகிராப்ஸ் அனைத்தையும் தனது கோல்டன் ரெட்ரீவர் நாயுடன் எடுத்துள்ளார். மேலும் இந்த படங்களை இணையத்தில் பகிர செய்துள்ளார். முதலில் இன்ஸ்டாகிராமில் இந்த படங்களை பதிவிட்டுள்ளார். அதன் பிறகு ரெட்டிட் தளத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறார்.



    பதிவேற்றம் செய்த ஒரு சில மணி நேரங்களிலே பலரின் பாராட்டுகளை இந்த போட்டோஷூட் பெற்றுவிட்டது. இதற்கு முன்னதாக மணப்பெண்ணின் திருமண புகைப்படக் கலைஞரான ஸ்டெபானி நச்ட்ராப், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படங்களைப் பகிர்ந்துள்ளார். அதன் பிறகு மணப்பெண்ணான ஹனா தனது அன்பான நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.



    இந்த சிறப்பான போட்டோஷூட் பற்றி திருமண புகைப்படக் கலைஞரான ஸ்டெபானி நச்ட்ராப் சில அன்பான வார்த்தைகளை கூறியுள்ளார். "10 போட்டோக்கள். ஒரு பெண்ணிற்கும், அவளது நாயிற்கும், அவளது கணவருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய அன்பை சொல்ல இந்த போட்டோக்கள் போதும். இவரின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போட்டோகிராப்களை நான் எடுத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மணப்பெண் ஹனா தனது பாசமான நாயுடன் இந்த வெட்டிங் போட்டோஷூட் தொடங்கி உள்ளார்.



    இது உண்மையில் மிக சிறப்பான போட்டோஷூட். இப்படியொரு அழகிய தருணத்தை புகைப்படம் எடுப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று இந்த புகைப்படங்களை பகிரும்போது ஸ்டெபானி குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அனைவரும் இதை பற்றி புகழ்ந்து வருகின்றனர். சமூக ஊடங்கங்களில் உள்ள பலரின் இதயத்தை ஹனாவின் வெட்டிங் போட்டோஷூட் கவர்ந்துள்ளது. மேலும் பலர் இந்த போட்டோஷூட் பற்றிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அதில் ஒருவர், "நான் திருமணங்களில் மலர் அலங்காரம் செய்பவன். ஆயிரக் கணக்கான திருமண போட்டோஷூட்களை பார்த்துள்ளேன். ஆனால் இனி எனக்கு எப்போதும் பிடித்த போட்டோஷூட் இது தான்" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், "இதுவரை நடந்ததிலே இது தான் பொன்னான விஷயம்! உங்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: