சமீப காலமாக பல்வேறு திருமணம் சார்ந்த வைரல் வீடியோக்களை இணையத்தில் பார்க்கிறோம். மாலையிடும் நேரத்தில் மணமகனைப் பற்றி பெரிய புகாருடன் வருவது, மணப்பெண் எழுந்து செல்வது உள்ளிட்ட பிரான்க்ஸ் மற்றும் வேடிக்கையான போட்டோ ஷூட் என்று திருமணம் ஜாலியான நிகழ்வாக மாறி வருகிறது.
ஒரு பக்கம் பாரம்பரிய முறைப்படி எந்த சடங்குகளுக்கும் குறை வைக்காமல் திருமணம் நிகழ்ந்தாலும் மற்றொரு பக்கத்தில் மாறி வரும் டிரெண்டு மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப, வெளிநாட்டு கலாச்சாரம் சடங்குகள் என்று திருமண கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன.
அதிலும் குறிப்பாக ப்ரீ வெட்டிங் அல்லது போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் என்று கூறப்படும் தம்பதிகளின் பிரத்தியேகமான போட்டோ ஷூட் பல தீம்களில் நடத்தப்படுகிறது. நீச்சல் குளத்தில் எடுக்கப்படும் ஃபோட்டோஷூட் மிகவும் பிரபலம். அதில், ஒரு நிகழ்வின் போது, திருமண மாப்பிள்ளையை தண்ணீரில் தள்ளி விட்டிருக்கிறார் மணமகள். திருமணத்தின் போது நடத்தப்பட்ட ஒரு ஃபோட்டோ ஷூட்டில் தான் வேடிக்கையான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணம் நடக்கும்போது மணமகன் மணமக்களும் எவ்வளவு ஜாலியாக இருந்தாலும் இருவருக்குள்ளும் கொஞ்சம் டென்ஷன் இருக்கத்தான் செய்யும்.
எந்த பிரச்சனையும் சச்சரவும் இல்லாமல் திருமணம் நன்றாக நடைபெற வேண்டும் என்ற கவலை அனைவருக்குமே இருக்கும். அவ்வப்போது திருமணத்தில் ஏற்படுத்தக்கூடிய மன அழுத்தத்தை குறைக்க கொஞ்சம் ஜாலியாக யாராவது ஏதாவது செய்வது வழக்கம். ஒரே ஒரு சிறிய செயல் பலரின் மன அழுத்தத்தையும் குறைத்து அழகான ஞாபகமாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண ஃபோட்டோஷூட்டின் போது மணமகனை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட மணமகளின் வீடியோ இணையம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram
also read : இந்த படத்தில் மறைந்திருக்கும் தவளையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
திருமண சடங்கிற்குப் பின்பு திருமணத்திற்கான அனைத்து சடங்குகளும் முடிந்த பின்பு இந்த போட்டோ ஷூட் எடுக்கப்படுகிறது. மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் முகூர்த்த ஆடைகளை அணிந்துள்ளார்கள். அலங்காரத்தின் நடுப்பகுதியில் புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொண்டிருக்கும் போது, மணப்பெண் மாப்பிள்ளையை நீச்சல் குளத்திற்குள் தள்ளிவிட முயற்சிக்கும் காட்சி வீடியோவில் உள்ளது. எப்படியாவது தண்ணீரில் தள்ளிவிட வேண்டும் என்று மணப்பெண் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது, மாப்பிள்ளையும் அவரை தன்னோட இழுத்துக் கொண்டு தண்ணீரில் விழுகிறார்.
விழுந்தபின் நிதானத்துக்கு வந்து, பொய் கோபம், முறைப்பு என்று இருந்தாலும், அவர்கள் உடனடியாக சிரித்து அணைத்து கொள்வது திரைப்படங்களில் காணப்படும் ரொமான்டிக் காட்சிகளை மிஞ்சுவது போல் உள்ளது.ஒரு சில நொடிகளே இருந்தாலும், மனதை கொள்ளை கொள்கிறது இந்த வீடியோ! காதலில் விழுவது என்றால் இப்படித்தான் இருக்கும் என்று கேப்ஷனுடன் பகிரப்படும் அந்த வீடியோ பகிரப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Viral Video