Home /News /trend /

Viral Video | திருமணத்தின் போது தூங்கி விழுந்த மணப்பெண் - வைரலான வீடியோ!

Viral Video | திருமணத்தின் போது தூங்கி விழுந்த மணப்பெண் - வைரலான வீடியோ!

 வைரலான வீடியோ!

வைரலான வீடியோ!

திருமண நாளில் அசதியில் உறங்கிய மணமகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நம் நாட்டில் நடைபெறும் திருமணங்கள் உண்மையான திருமணம் நடக்கும் கடைசி நாளுக்கு 3-4 நாட்களுக்கு முன்னதாகவே வெவ்வேறு சடங்குகளுடன் கோலாகலமாக துவங்கி விடுகிறது. அதிலும் திருமணத்திற்கு முதல் நாள் நள்ளிரவுக்கு முன்பு வரை மற்றும் திருமணத்தன்று அதிகாலை முதல் என திருமணம் நடந்து முடிய பல மணி நேரங்கள் எடுக்கிறது. ஒவ்வொருவரது வாழ்வில் மிக முக்கியமான தருணம் மற்றும் உச்சகட்ட மகிழ்ச்சி கொண்டாட்டமாக இருந்து வருகிறது திருமணம்.

களை காட்டும் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வாக இருந்தாலும், பெரும்பாலான மணமக்கள் திருமணத்தின் முடிவில் மிகவும் சோர்வடைகிறார்கள், இருப்பினும், அனைவரின் கவனத்தையும் மையமாக கொண்ட மணமகன் மற்றும் மணமகளுக்கும் திருமணம் நடக்கும் நாள் சில மன அழுத்தத்தை அளிக்கிறது. திருமணத்திற்கு முந்தைய பல சடங்குகள் மற்றும் சுற்றி இருக்கும் கூட்டத்தினரின் சலசலப்புகள், இசை கச்சேரிகள் என நடக்கும் அலப்பறையால் மணமகனும், மணமகளும் சோர்வடைவது என்பது இயல்பானது.

அதிலும் குறிப்பாக திருமணம் செய்து கொள்ளும் மணமகள் பல கனமான ஆடைகளை அவ்வப்போது மாற்றி கொண்டே இருப்பது, பலமணி நேர மேக்கப் மற்றும் அதனை களையாமல் பார்த்து கொள்வது, பல மணி நேரங்கள் ஒரே இடத்தில உட்கார்ந்தே இருப்பது என மணமகனை விட மணமக்களுக்கு அதிக சிரமம் இருப்பதை நம்மால் காண முடிகிறது.

ALSO READ |  இறந்த பின்னரும் பாம்பினை துன்புறுத்தி ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர் - வைரலாகும் வீடியோ

எல்லாம் சரி தான், ஆனால் திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் விழித்திருப்பது முக்கியமல்லவா. ஆனால் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், மணமகள் ஒருவர் தன் திருமணத்திலேயே தூங்குவதை காண முடிந்தது. Battered Suitcase என்ற இன்ஸ்டா அக்கவுண்ட் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக ஷேராகி வருகிறது.

 குறிப்பிட்ட அந்த வீடியோவில் மணமகள் ஏராளமான நகை மற்றும் மேக்கப்புடன் அழகான சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற லெஹெங்கா உடையை அணிந்திருப்பதை காணலாம். மணமக்களுக்கான ஸ்பெஷல் சோபாவில் அமர்ந்தபடியே கைகள் இரண்டையும் கோர்த்து கொண்டு தூக்கத்தை அடக்க முடியாமல், தூங்கி தூங்கி விழுகிறார். அவருக்கு அருகிலேயே மணமகன் கழுத்தில் பண மாலையுடன் நிற்பதையும் வைரல் வீடியோவில் பார்க்கலாம். ‘தூங்கும் மணப்பெண்ணின்’ வீடியோவை அவரது நண்பர்கள் அவருக்கு முற்றிலும் தெரியாத நிலையில் ரெக்கார்ட் செய்து உள்ளனர்.

ALSO READ |  ஆதரவற்ற பூனைக்கு அடைக்கலம் கொடுத்த நாய்க்குட்டி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

“இதோ தூக்கத்தில் இருக்கும் மணப்பெண் வருகிறாள். ஏற்கனவே காலை 6.30 ஆகிவிட்டது & திருமணம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, ”என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டு உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களில் சிலர் பல மணமகளைப் பார்த்து சிரித்தாலும், பலர் தங்களது திருமணத்தின் போது அதே சூழலில் தான் இருந்ததாக கூறி மணபெண்ணிற்கு ஆதரவாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி