ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

திருமணம் முடிந்த சில மணி நேரங்களில்...மணமகன் தம்பியை கரம் பிடித்த மணமகள்!

திருமணம் முடிந்த சில மணி நேரங்களில்...மணமகன் தம்பியை கரம் பிடித்த மணமகள்!

திருமணம்

திருமணம்

திருமணம் முடிந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில்....

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

திருமணம் செய்த ஒரே நாளில் அண்ணனை விவாகரத்து செய்து விட்டு தம்பியை கரம் பிடிக்கும் காட்சிகளை எல்லாம் நம் ஊர் சீரியல்களில் தான் பார்த்திருப்போம். அதற்கு கட்டாயத் திருமணம் அல்லது காதல் காரணமாக இருக்கும். ஆனால் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் அது உண்மையிலேயே நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரியானா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், தவாய் குர்த் கிராமத்தின்  பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவாகி இருந்தது. திருமண நாளன்று, மணமகள் மற்றும் மணமகன்  குடும்பத்தினர் முன்னிலையில் சிறப்பாக திருமண நிகழ்ச்சி முடிந்துள்ளது.

திருமணம் முடிந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமகனின் முதல் மனைவி, குழந்தைகளுடன் மணமகள் திருமணம் நடந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.  அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். அனால் விவாகரத்து எதுவும் தராமல் தனது கணவர் வந்து இங்கே இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தகவல் அறிந்து போலீசாரும் திருமணம் நடந்த வீட்டுக்கு விரைந்தனர். பின்னர், போலீசார் இரு தரப்பினைரையும் அஸ்மோலி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து கிராமத் தலைவர்கள் சிலர் காவல் நிலையத்திற்கு சென்று பரஸ்பர ஒப்புதலுக்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அந்த பேச்சுவார்த்தைபடி காலையில் அண்ணனோடு நடந்த திருமணத்தை ரத்து செய்தனர். அந்த மணமகளுக்கும்  மணமகனின் இளைய சகோதரருக்கும் திருமணம் செய்து வைப்பதும் என்று முடிவு செய்து அவர்களை அழைத்துச் சென்றனர். இந்த முடிவு இரு  கிராமங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Marriage, Uttar pradesh