Home /News /trend /

திருமண பரிசாக இது மட்டுமே வேண்டும்... மணப்பெண் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன விருந்தினர்கள்! 

திருமண பரிசாக இது மட்டுமே வேண்டும்... மணப்பெண் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன விருந்தினர்கள்! 

 மணப்பெண்

மணப்பெண்

திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் தங்களுக்கு பணத்தை மட்டுமே பரிசாக தர வேண்டும் என மணப்பெண் கறாராக கேட்டு வாங்கியுள்ளதற்கான காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    இரு மனங்கள் இணையும் திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கூடி நின்று மணமக்களை மனதார வாழ்த்த வேண்டும். இதற்காகவே எந்த மதத்தின் முறைப்படி திருமணத்தை நடத்தினாலும் சொந்த, பந்தங்கள், உற்றார் உறவினர்கள் வருகை தந்து வாழ்த்த வேண்டும் என பத்திரிகைகளில் அச்சிடுகிறோம். அப்படி நடக்கும் பல திருமணங்களில் உறவுகளுக்கு அடுத்தப்படியாக அவர்கள் கொண்டு வரும் பரிசுப் பொருட்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

    வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், நியூ எலெக்ட்ரானிக் கேஜெட்ஸ், பூங்கொத்துக்கள், புத்தகங்கள் ஆகியவற்றுடன் சில பல மொய் கவர்களும் கிடைக்கும். ஆனால் சில திருமணங்களில் “மொய் வேண்டாம்... உங்கள் வாழ்த்துக்கள் மட்டுமே போதும்” என பத்திரிகையில் அச்சிடுவோரும் உண்டு. இப்படி மொய் வேண்டாம் என கறாரா முடிவெடுப்போர் ஒருபுறம் என்றால், இதை மட்டும் மறக்காமல் கிப்ட்டாக கொடுத்துவிடுங்கள் என்ற கோரிக்கையுடன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்த மணப்பெண்ணின் கோரிக்கை தாறுமாறு வைரலாகி வருகிறது.

    இதற்காக மணப்பெண் சொன்ன காரணத்தை கேட்டு தான் அந்த நபர் ‘அப்படியே ஷாக்காகிட்டேன்’ என பதிவிட்டுள்ளார். ஆம், திருமணத்திற்கு மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் சேர்ந்து மொத்தம் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் 23.3 லட்சம் ரூபாயை செலவழித்துள்ளார்கள். எனவே அந்த மொத்த தொகையையும் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மூலமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது விருந்தினர்கள் யாரும் கிப்ட் பொருட்கள், பூங்கொத்துக்கள் போன்றவற்றிற்கு பதிலாக பணத்தை பரிசாக கொடுக்கும் படி கேட்டுள்ளனர். இதன் மூலமாக திருமண ஆடை முதல் தேனிலவு வரை ஆகக்கூடிய ஒட்டுமொத்த செலவையும் வசூலிக்க திட்டமிட்டுள்ளனர்.

    மோமோஸ் சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்! நடந்தது என்ன?

    இந்த ஜோடியில் மணப்பெண் எந்த வேலையிலும் இல்லை, மணமகன் மட்டுமே பணியாற்றி வருகிறார். எனவே தான் திருமணத்திற்கு ஆன 23.3 லட்சம் ரூபாயை செலவை விருந்தினர்களிடம் வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள நபர், விருந்தினர் எண்ணிக்கை 125 ஆக இருக்க வேண்டும், எனவே அனைவரும் குறைந்தபட்சம் $250 பங்களிப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த பதிவிற்கு நெட்டிசன்களின் கலவையான கமெண்ட்களும் குவிந்து வருகிறது. ஒருவர், "இதை உங்கள் ஹனிமூன் ஃபண்ட் என்று அழைத்து, நீங்கள் விரும்பும் எதற்கும் அதைப் பயன்படுத்துங்கள். சரியாக வரவுசெலவுத் திட்டத்தைச் செய்ய வேண்டிய பொறுப்பு தம்பதியரிடம் உள்ளது. அதை சாதுரியமாக வைத்திருங்கள், விருந்தினர்கள் உங்களின் சிறப்பு நாளுக்கு நிதியளிக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்." என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "இந்த ஜோடி உங்களுக்கு அறிமுகமானவர் மட்டுமே என்பதால், நீங்கள் கலந்துகொள்ள இயலவில்லை' என்று பதிலளித்து, இந்த உரிமையுள்ள தம்பதியருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." என கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி