மருத்துவமனையில் புற்றுநோயால் பாதித்த பாட்டியின் கண்முன்னே திருமணம் செய்துகொண்ட பேத்தி

பாட்டியின் முன் திருமணம்

புற்றுநோய் பாதித்த பாட்டியின் முன்பு இளம்பெண் திருமணம் செய்துகொண்டார்.

 • Share this:
  புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்பதற்கு முன்னர் ஒரு பாட்டி தனது பேத்தியின் திருமணத்தை காண வாய்ப்பு பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. பேஸ்புக்கில் வைரலாகி வரும் இந்த வீடியோ உங்கள் மனதை பாதிக்க வாய்ப்புள்ளது.

  மெதடிஸ்ட் ஹெல்த்கேர் சிஸ்டம் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளது. அவிஸ் ரஸ்ஸல் என்ற பாட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் கடுமையான உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  முன்னதாக அவரது பேத்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், தனது பாட்டியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தனது திருமணத்தை தீர்மானிக்கப்பட்ட தேதியிலிருந்து தள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது . அதில் அவிஸ் ரஸ்ஸல் புற்றுநோய்க்கு எதிராக கடுமையாக போராடினாலும், உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படாமல் நாளுக்குநாள் பாதிப்பு அதிகரித்தது. அவரது பேத்தி, சீன், தனது நடுநிலைப் பள்ளி நண்பர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் ஓரிரு மாதங்களில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.


  ஆனால் அவரது பாட்டியின் நிலை மிகவும் மோசமடைந்து கொண்டே செல்கிறது என்பதை அறிந்த சீன் பாட்டி உயிருடன் இருக்கும் போதே அவர் கண் முன்னே திருமணம் நடக்க வேண்டும் என விரும்பினார். எனினும் இது பாட்டி தற்போது மருத்துவமனையில் இருப்பதால் இந்த முடிவை செயல்படுத்துவது கண்டனம் என நினைத்தார். ஆனால் விடாமுயற்சியாக மருத்துவமனையில் அனுமதியை வாங்கினார். அனைவரும் ஆச்சரியப்படும்படி, சீன் தனது திருமணத்தை மெதடிஸ்ட் மருத்துவமனையில் ஒரு அறையில் விழாவை நடத்த முடிவு செய்து வெற்றிகரமாக தனது காதலனை பாட்டியின் முன்னிலையில் கரம் பிடித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதனால் அவிஸ் ரஸ்ஸல் தனது பேத்தியின் திருமணம் செய்து கொள்வதைக் காண முடிந்தது. அவிஸ் தனது இறுதி காலத்தில் இந்த பூமியில் தனது பேத்தி திருமணத்தை கொண்டாடியபடி கழித்தார் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பாட்டி படுக்கையில் படுத்திருந்தவாறு திருமணத்தை காண்கிறார். அந்த அறையில் பாட்டி, மணப்பெண், மணமகன் மற்றும் திருமணத்தை நடத்தி வைப்பவர் என நான்கு நபர்கள் மட்டுமே உள்ளனர். பாட்டி முன்னிலையில் திருமண மோதிரத்தை மாற்றிக்கொள்ளும் தம்பதிகள் திருமணம் நிறைவடைந்த பின்னர் பாட்டியை கட்டித்தழுவி ஆசிர்வாதத்தை பெற்று கொள்கின்றனர். மேலும் பாட்டி அருகே நின்று போட்டோ எடுத்து கொள்கின்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
  Published by:Karthick S
  First published: