• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மணமகளின் விநோத செயலால் உறவினர்கள் அதிர்ச்சி... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

மணமகளின் விநோத செயலால் உறவினர்கள் அதிர்ச்சி... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

சமீபத்தில் இன்டர்நெட்டில் வைரலாகிய வினோத கதை ஒன்று திருமண பந்தத்தில் இணைந்தவர்கள், நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் காசு வசூலித்ததை விவரித்து நெட்டிசன்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

  • Share this:
கல்யாணம் என்பது இரு உள்ளங்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் உறவுகள் இணையும் திருவிழாவாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக சந்திக்க முடியாமல் இருப்பவர்கள் கூட திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டு நீண்டகாலமாக பார்க்க முடியாமல் இருக்கும் உறவினர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை பகிர்ந்து கொண்டு மனம் விட்டு பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன திருமணங்கள்.

எனவே திருமண பந்தத்தில் இணையும் மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என அனைவருமே கல்யாணம் மற்றும் அதனையொட்டி நடக்கும் ரிசப்ஷனில் தங்கள் அன்புக்குரியவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து மகிழ்ச்சியாக பங்கேற்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு குடும்பமாக ஒன்று சேரும் போது அனைவருக்கும் கிடைக்கும் உற்சாகம் மற்றும் இன்பம் அலாதியானது.

மீண்டும் எப்போது அடுத்த சுபநிகழ்ச்சி வரும் எல்லோரும் ஒன்று சேரலாம் என்ற நினைப்பில் ஒரு ஏக்கத்துடன் வீடு திரும்புவார்கள். இந்த சந்தோஷத்தை மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பும் திருமண வீட்டினர் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் கூட அவர்களின் விரும்தோம்பல் என்பது தான் சுப நிகழ்ச்சியில் பங்கு பெறுவோரை மகிழ்விக்கிறது. திருமணத்திலோ அல்லது வரவேற்பிலோ கொடுக்கப்படும் விருந்துக்கு யாரும் கலந்து கொள்பவர்களிடம் சாப்பாட்டிற்காகும் காசை கேட்க மாட்டார்கள். இது தானே இயற்கை.

Also Read : மாணவர்கள் ஸ்கர்ட் அணிந்து வாருங்கள்! ஆச்சரியப்பட வைக்கும் பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பு

ஆனால் சமீபத்தில் இன்டர்நெட்டில் வைரலாகிய வினோத கதை ஒன்று திருமண பந்தத்தில் இணைந்தவர்கள், நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் காசு வசூலித்ததை விவரித்து நெட்டிசன்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. Reddit யூஸர் ஒருவர் இந்த கதையை ஆன்லைனில் ஷேர் செய்து இருக்கிறார். குறிப்பிட்ட யூஸர் தனது நண்பரான மணமகள் அனுப்பிய திருமண அழைப்பு செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், " திருமண நிகழ்வுக்கான உணவு செலவு எங்களால் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது. எனவே எங்களால் வாங்க முடியவில்லை. எனவே ஒரு தலைக்கு விருந்து செலவு USD 99 (தோராயமாக ரூ.7,300) ஆகும். எங்கள் இருப்பிடத்திலிருந்து 4 மணிநேர பயண தூரத்தில் தான் நிகழ்ச்சி நடக்கும் இடம் உள்ளது. எனவே பெட்ரோல் செலவு, தங்குமிடம், ஆடைகள், குழந்தை பராமரிப்பாளர் மற்றும் திருமணத்தில் நீங்கள் உண்ணும் உணவுக்கு மிக அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கிறது" என்று காரணமும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர். சிலர் மணமகளின் வித்தியாசமான இந்த கோரிக்கையில் முற்றிலும் ஆச்சரியமடைந்தாலும், பெரும்பாலானோர் எவ்வளவு நெருக்கமானவர்களின் கோரிக்கையாக இருந்தாலும் இது போன்ற திருமண நிகழ்வுகளில் பங்கேற்க மாதோ, என்று பலரும் வெளிப்படையாக கமெண்ட்ஸ் செய்து இருக்கிறார்கள்.

Also Read : ஓரியோ பிஸ்கட்டில் பக்கோடா..! தெரு கடைகளில் பேமஸாகும் ரெசிபி

மணமகளின் இந்த கோரிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள நெட்டிசன்கள், அவ்வளவு செலவு மிக்க இடத்தில் திருமணத்தை ஏற்பாடு செய்யாமல் எளிமையான முறையில் கல்யாணத்தை நடத்தி கொள்ள வேண்டியதுதானே என்று கடுமையான கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: