முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ரூபாய் நோட்டுகள் எண்ண தெரியாத மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள் - வைரல் சம்பவம்

ரூபாய் நோட்டுகள் எண்ண தெரியாத மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள் - வைரல் சம்பவம்

  மணமகள்

மணமகள்

Viral : திருமணத்துக்கு முன்பு, இப்படிப்பட்ட கணவன் வேண்டும், இப்படிப்பட்ட மனைவி வேண்டுமென்று ஒரு சில எதிர்பார்ப்புகள் நிச்சயமாக எல்லாருக்குமே இருக்கும்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று காலம் காலமாக கூறப்பட்டு வந்தாலும் பல திருமணங்கள் தாலி கட்டும் நேரம் முன்பு, அல்லது திரைப்படங்களில் வருவது போலவே ஒரு சில திருமணங்கள் பரபரப்பான திருப்பங்களோடு முகூர்த்த நேரத்துக்கு முன்பாக நின்று விடுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன! சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வரதட்சணை கொடுக்க முடியாத காரணத்தால் திருமணம் நின்று போன பல கதைகளை கேட்டிருப்போம். ஆனால், தற்போது வெவ்வேறு விதமான, வித்தியாசமான காரணங்களுக்காக கடைசி நேரத்தில் திருமணம் நின்று விடுகிறது. சமீபத்தில் மணமகனுக்கு சரியாக பணம் எண்ணத் தெரியவில்லை என்று காரணத்தால் மணமகள் திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். இதை பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

திருமணத்துக்கு முன்பு, இப்படிப்பட்ட கணவன் வேண்டும், இப்படிப்பட்ட மனைவி வேண்டுமென்று ஒரு சில எதிர்பார்ப்புகள் நிச்சயமாக எல்லாருக்குமே இருக்கும். ஆனால் எதிர்பார்த்த எல்லாமே நிறைவேறும் என்பது சாத்தியமில்லை என்பதால் சிலவற்றை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். இருப்பினும், ஒரு சிலர் தான் எதிர்பார்த்த எல்லாமே திருமணம் செய்து கொள்ள போகும் நபரிடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார்கள். உத்தர பிரதேசத்தில் இருக்கும் பரூக்காபாத் என்ற ஊரைச் சேர்ந்த மணமகள் ரீடா சிங். திருமணத்தை நிறுத்திய இந்த மணமகள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

ஆனால், மணப்பெண்ணின் மீது தவறுள்ளதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்! திருமணத்திற்கான சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது மணமகன் நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமாக இருப்பதை கண்டறிந்த புரோகிதர், மணமகளின் குடும்பத்திற்கு இதைப் பற்றி தெரிவித்திருக்கிறார். எனவே மணமகனை சோதித்து பார்க்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்த பெண்ணின் குடும்பம் அவருக்கு ஒரு சோதனை நடத்தியிருக்கிறது.

அவரிடம் சில ரூபாய் நோட்டுகளை கொடுத்து எண்ண சொல்லி உள்ளனர். ஆனால், மணமகனால் ₹10 நோட்டுகளை சரியாக எண்ண முடியவில்லை என்பதால் உடனடியாக திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். 21 வயதான மணமகள் ரீடா சிங், திருமணம் வேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருந்தார். மேலும், மணமகனுக்கு மன ரீதியான கோளாறு இருப்பதைப் பற்றி தெரியாது என்பதால் தான் திருமணம் செய்ய சம்மதித்தோம் என்று மணமகள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மணமகளின் தாயான மோஹித் ‘நல்ல நம்பிக்கையின் அடிப்படையில், நெருங்கிய உறவினர் கூறும் வார்த்தைகளை நம்பித்தான் திருமண ஏற்பாடு செய்தோம். மணமகனை நாங்கள் இதற்கு முன்பு சந்திக்கவில்லை. ஆனால் திருமண சடங்கில் அவரது வித்தியாசமான நடவடிக்கையை பார்த்து சந்தேகப்பட்டதால் தான் ரூபாய் நோட்டுகளை கொடுத்து எண்ண செய்தோம். இந்த நிலையில் இருக்கும் ஒரு நபரை யாரும் திருமணம் செய்ய முடியாது. எனவே என் மகள் திருமணம் செய்ய மறுத்து விட்டாள்’ என்று தெரிவித்தார்.

போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தி கூட மணமகள் பிடிவாதமாக இருந்ததால், மண்டபத்தில் இருந்து மணமகன் குடும்பம் வெளிய அனுப்பப்பட்டது.

First published:

Tags: Trends, Viral