ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

திருமணத்தை நிறுத்தியத்ற்கு மணப்பெண் கூறிய வினோத காரணம்... மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி

திருமணத்தை நிறுத்தியத்ற்கு மணப்பெண் கூறிய வினோத காரணம்... மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி

மாதிரி படம்

மாதிரி படம்

Viral | மணமகன் குடும்பத்தால் மணமகளுக்கு வழங்கப்பட்ட ஒரு முக்கிய பொருள் காரணமாக சர்ச்சை ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம் திருமணம். எனவே இந்த திருமணத்தை மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற நம் நாட்டில் நடக்கும் திருமணங்களில் பெரும்பாலும் சக்திக்கு மீறி பணம் செலவழிக்கப்படுகிறது.

  மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் அலங்காரம், உணவு உடைகள், நகைகள் போன்றவற்றுக்கு பெரும் தொகையை செலவிடுகிறார்கள். இப்படி பார்த்து பார்த்து ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள் பல்வேறு காரணங்கள் திடீரென்று கடைசி நிமிடத்தில் கூட நிறுத்தப்படுகின்றன. ஆனால் ஒரு விசித்திரமான சம்பவத்தில் மணமகன் குடும்பத்தால் மணமகளுக்கு வழங்கப்பட்ட ஒரு முக்கிய பொருள் காரணமாக சர்ச்சை ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியை சேர்ந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது வருங்கால கணவரை திருமணம் செய்ய மறுத்து திருமணத்தை நிறுத்தி உள்ளார். இதற்கு இவர் கூறி இருக்கும் காரணம் தான் அனைவரையும் திகைக்க செய்துள்ளது.பொதுவாக திருமணம் வாழ்வில் முக்கியமான நிகழ்வு என்பதால் திருமணத்தன்று மிகவும் அழகான அதே சமயம் ஆடம்பரமான உடைகளை அணியவே அனைவரும் விரும்புவார்கள். மணமகளுக்கு மணமகன் வீட்டாரும், மணமகனுக்கு மணமகள் வீட்டாரும் திருமணத்திற்கான உடைகளை வாங்கி தருவது வழக்கம்.

  Also Read : 60 கிலோ எடையை அதிரடியாக குறைத்த பெண்: வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

  இதில் சில பிரச்சனைகள் வந்து போகும். தற்போது திருமணம் நின்று போய் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திலும் திருமண உடையால் தான் பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளது. ராஜ்புரா பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துள்ளன. திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் லக்னோவில் ஆர்டர் செய்யப்பட்ட லெஹெங்காவை மாப்பிள்ளை வீட்டார் ஆர்டர் செய்து வரவழைத்து தங்கள் வீட்டிற்கு வர போகும் மருமகளுக்கு கொடுத்து உள்ளனர். மாப்பிள்ளை வீட்டு சார்பாக தனக்கு கொடுக்கப்பட போகும் டிரஸ் மிகவும் ஆடம்பரமாகவும், காஸ்டலியாகவும் இருக்கும் என்ற ஆசையில் அந்த பெண் இருந்துள்ளார்.

  ஆனால் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்ட திருமண டிரஸ்ஸான லெஹெங்காவை பார்த்ததும் மிகவும் அப்செட்டாகி விட்டார். எதிர்பார்த்தது போல ஆடம்பரமாக அந்த லெஹெங்கா இல்லாதது ஒருபக்கம் என்றால், அதன் விலையும் ரூ.10,000 மட்டுமே என்பதும் அவருக்கு பிரச்சனையாக இருந்துள்ளது. மலிவான லெஹெங்காவை தனக்கு மாப்பிள்ளை வீட்டார் கொடுத்து விட்டதாக நினைத்த அவர் அதை பிடிக்கவில்லை என்று கூறி வாங்க மறுத்துள்ளார்.

  இதனை தொடர்ந்து மணமகனின் தந்தை அந்த பெண் அவருக்கு விருப்பமான லெஹெங்காவை வாங்கி கொள்ள சொல்லி அவரது ஏடிஎம் கார்டைக் கொடுத்து சமாதான முயற்ச்சியில் இறங்கினார். ஏனென்றால் ஜூன் மாதமே நிச்சயதார்த்தம் முடிந்து இந்த மாதம் திருமணம் (நவம்பர் 5) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளையின் தந்தை செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாகியது. ஒருகட்டத்தில் லெஹங்காவின் விலை குறித்த விவாதம் சண்டையாக மாறியது, இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி அதிர வைத்துள்ளார் அந்த பெண். இந்த விஷயம் கோட்வாலி காவல்துறைக்கு சென்றது. அங்கு சமரசம் செய்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மூத்த போலீஸ் அதிகாரி முயற்சித்த போதிலும், இறுதியாக இரு தரப்பினரும் திருமணத்தை நிறுத்த முடிவு செய்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral