Home /News /trend /

மணமகன் செய்த காரியத்தால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மணமகன் செய்த காரியத்தால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மணமகன் மணமகள் கழுத்தில் மாலை மாற்றும் சடங்கு நிகழ்த்து. அப்போது, மணமகன் பெண்ணின் கழுத்தில் மாலையை போடுவதற்கு பதிலாக, அவர் மீது வீசி மாலையை எறிந்து இருக்கிறார்.

ஒவ்வொரு திருமண நிகழ்வுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. எல்லா திருமணங்களிலும் நெகிழ வைக்கும் அளவுக்கு ஏதாவது ஒரு சில விஷயங்கள் நடக்கும். அதே போல ஒரு சில திருமணங்களில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் எதிர்பாராத நிகழ்வுகளும் ஏற்படும். திருமணமே நின்று போவது என்ற அளவுக்கு கூட பல சம்பவங்கள் நடந்துள்ளது.

சமீபகாலமாக மணமேடையில் சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் போது, திருமணம் நிறுத்தப்பட்ட செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில், மணமகன் செய்த காரியத்தால் வெறுப்படைந்த மணமகள், மாலை மாற்றும் சடங்கின் பொது திருமணத்தை நிறுத்தி விட்டு வெளியேறினார். அதைப் பற்றிய முழு விவரம் இங்கே.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆரையா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்தியா முழுவதும் எந்த பகுதியாக, மாநிலமாக இருந்தாலும் சரி, திருமணங்களில் மாலைமாற்று சடங்கு கட்டாயமாக இடம்பெறும். அதைப்போல உத்திரபிரதேசத்தில் நடந்த இந்த திருமணத்தில் மாலை மாற்றும் சடங்கு நடைபெற்றது. தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களில் மாலைகளை மணமகனும் மணமகளும் மாற்றிக்கொள்வார்கள். அதே போல, உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமணத்திலும், மணமகன் மணமகள் கழுத்தில் மாலை மாற்றும் சடங்கு நிகழ்த்து. அப்போது, மணமகன் பெண்ணின் கழுத்தில் மாலையை போடுவதற்கு பதிலாக, அவர் மீது வீசி மாலையை எறிந்து இருக்கிறார். மணமகனின் இந்த நடத்தை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மணமகள் உடனேயே, அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மணமேடையில் இருந்து வெளியேறினார்.

இதையும் படியுங்கள் :  ராமரைத் தொடர்ந்து வார்னரின் மகள்கள்.. இணையத்தில் வைரலாகும் புஷ்பா பட பாடல் வீடியோ

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போதே, இரண்டு குடும்பத்தினரும் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மணமகன், நான் மாலையை வீசி எறியவில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். இடையில் இரண்டு குடும்பங்களும் மணமகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மணப்பெண் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். இறுதியாக போலீசார் அழைக்கப்பட்டனர். காவல்துறையினர் வந்த பிறகு இரண்டு குடும்பங்களும் பேசி, தங்கள் பரிசுகளை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

மணமகனின் தவறான நடத்தையால் அல்லது நடவடிக்கையால் திருமணம் நின்று போவது இது முதல்முறை அல்ல. சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூரில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதில் மணமகள் தனது முறைப்பையனுடன் நடனம் ஆடியதை கண்ட மாப்பிள்ளை அவரை கண்டித்து, பின்னர் அடித்திருக்கிறார். இதனால், திரைப்படங்களில் வருவது போல, மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி, தன்னுடைய அத்தைப் பையனையே திருமணம் செய்திருக்கிறார். தற்போது மணமகன் திருமணத்துக்கு ஆன ஏழு லட்ச ரூபாய் செலவை திருப்பித் தர வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Marriage, Marriage Problems, Trending

அடுத்த செய்தி