• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • திருமணத்தின்போது மணமகன் செய்த காரியம்.. பளார் விட்ட மணமகள் – வைரலாகும் வீடியோ

திருமணத்தின்போது மணமகன் செய்த காரியம்.. பளார் விட்ட மணமகள் – வைரலாகும் வீடியோ

மணமகனுக்கு பளார் விட்ட மணமகள்

மணமகனுக்கு பளார் விட்ட மணமகள்

மணமகள் அறைந்ததில் இருந்து உறவினர்கள் ஓடும் காட்சிகள் வரை அனைத்தையும் படம்பிடித்துள்ளார் திருமணத்துக்கு வந்த குசும்புக்காரர் ஒருவர்.

  • Share this:
    திருமண சடங்கின்போது மணமகன் கன்னத்தில் மணமகள் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்திய திருமணங்கள்  பொதுவாக சடங்குகள், சம்பிரதாயங்கள் நிறைந்தே காணப்படுகின்றன. திருமண சடங்கின்போது மணமகள் ஆத்திரப்பட்டு மணமகனையும் அவரது உறவினர் ஒருவரையும் கன்னத்தில் அறைந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உறவினர்கள் சூழ்ந்து இருக்க மணமக்கள் இருவரும் மணமேடையில் அமர்ந்திருந்தனர். பெரியோர்கள் திருமண சடங்குகளை செய்துக்கொண்டிருந்தனர்.

    Also Read: மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஆப்கான் குழந்தை - இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம் கொண்டாடும் நெட்டிசன்கள்

    அப்போது மணமகள் அருகில் இருந்த உறவினர் ஒருவர் வாயில் குட்கா மென்றுக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் அந்த நபரை அடித்துள்ளார். மணமேடையில் உட்கார்ந்துக்கொண்டு குட்கா மென்றுக்கொண்டிருக்கிறாயா என ஆத்திரத்துடன் கேட்டுள்ளார். அடி வாங்கியவர் என்ன நினைத்தாரோ என்னவோ நான் மட்டுமா குட்கா மென்றுக்கொண்டிருக்கிறேன். மாப்பிள்ளையும் தான் குட்கா போட்டிருக்கிறார் எனக் கூறியதுதான் தாமதம்.

     




    கொஞ்ச நேரத்தில் அந்த இடம் கோவை சரளா- வடிவேலு ரக காமெடி காட்சியாக மாறியது. வாயில் என்ன என மணமகள் ஆத்திரத்துடன் கேட்க மலுப்பலான பதிலை கூறியுள்ளார் நம்ம மாப்பிள்ளை. மாட்டிவிட்ட நபரை பார்த்து கடித்துக்கொண்டார்.  மணமகன் கன்னத்திலும் ஒரு பளார் விட்டார். உறவினர்கள் முன்னிலையும் வருங்கால மனைவி அடித்ததால் அவரது முகமே வாடிப்போனது. ஆனால் உறவினர்கள் முகத்தில் சிரிப்பலைகளை காணமுடிந்தது.

    Also Read:  தங்கக்கடத்தல்.. சினிமா பாணியில் கார் சேஸிங் - டிரைவர் கடத்தலில் திடீர் திருப்பம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குட்காவை துப்பிவிட்டு வருமாறு மணமகள் கூற இன்னொரு பளார் வாங்க வேண்டாம் என முடிவு செய்து மணமேடையில் இருந்து கோபமாக எழுந்தார். கொஞ்சம் தள்ளிப்போய் குட்காவை துப்பியிருக்கலாம் என்ன கோபமாக உறவினர்களை கடித்துக்கொண்டு  மணமேடையில் இருந்து கொஞ்சம் தள்ளிவந்து உறவினர்கள் இருந்த பகுதியில் குட்கா துப்பினார். மணமகள் அறைந்ததில் இருந்து குட்கா அபிஷேகத்தில் இருந்து தப்பிக்க உறவினர்கள் ஓடும் காட்சிகள் வரை அனைத்தையும் படம்பிடித்துள்ளார் திருமணத்துக்கு வந்த குசும்புக்காரர் ஒருவர். அத்தோடு இருந்திருக்கலாம் அந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றி மாப்பிள்ளையின் மானத்தை கப்பல் ஏற்றிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: