Home /News /trend /

பற்றி எரியும் நெருப்பில் திருமண விழா - மாஸ் காட்டிய ஹாலிவுட் தம்பதியின் சாகசம்..

பற்றி எரியும் நெருப்பில் திருமண விழா - மாஸ் காட்டிய ஹாலிவுட் தம்பதியின் சாகசம்..

 திருமண விழாவில் நெருப்புடன் விளையாடிய ஹாலிவுட் ஸ்டன்ட் தம்பதி

திருமண விழாவில் நெருப்புடன் விளையாடிய ஹாலிவுட் ஸ்டன்ட் தம்பதி

Trending Marriage: ஹாலிவுட் ஸ்டன்ட் தம்பதி Gabe Jessop மற்றும் Ambyr Bambyr ஆகியோர் நெருப்பு வைத்துக்கொண்டு தங்கள் திருமண ரேம்ப் வாக் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

    திருமண விழாக்களில் மணமக்கள் புதுமையான பல செயல்களை புரிந்து கவரும் நிகழ்வுகள் நடைபெறுவது இப்போது பெருகிவருகிறது. அந்த வகையில் ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்கள் தனது திருமணத்தில் நெருப்புடன் விளையாடி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

    Gabe Jessop மற்றும் Ambyr Bambyr ஆகிய இருவரும் ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்கள். இவர்கள் இருவரும், படப்பிடிப்பின் போது சந்தித்து கொண்ட வேளையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

    இதையடுத்து, இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி, திருமண தேதி நிச்சயிக்கப்பட்டு, ஏற்பாடுகள் நடைபெற்றுவந்த நிலையில், இருவரும் தங்களின் திருமண நாள் மறக்க முடியாத நாளாக அமைய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, இருவரும் துறை சார்ந்த அனுபவத்தை பயன்படுத்தி, திருமணம் முடிந்து தேவாயலத்தில் இருந்து வெளியே வரும் நடை Fireஆக இருக்கும்படி வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து, இருவரும் முறைப்படி தேவாலயத்தில் திருமணத்தை முடித்து, அங்கிருந்து வெளியே வந்துள்ளனர். ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய பாதுகாப்பு வசதிகளுடன் தங்கள் மீது தீயிட்டுக் கொண்டனர். தொடர்ந்து, தீ கொளுந்து விட்டு எரிய காதல் ததும்ப, புன்னகை மலர இருவரும் ராம்ப் வாக் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.




    அதேவேளை, இது பயிற்சி பெற்ற துறை சார்ந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்டது எனவும், இதை மற்றவர்கள் செய்து பார்க்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Hollywood, Viral Videos

    அடுத்த செய்தி