ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மணமேடையில் மணமக்கள் செய்த அநாகரீக செயல்... முகம்சுழித்த நெட்டிசன்ஸ் - வீடியோ வைரல்

மணமேடையில் மணமக்கள் செய்த அநாகரீக செயல்... முகம்சுழித்த நெட்டிசன்ஸ் - வீடியோ வைரல்

மணமேடையில் மணமக்கள் செய்த அநாகரீக செயல்

மணமேடையில் மணமக்கள் செய்த அநாகரீக செயல்

Viral Video | மணமேடையில் மணமக்கள் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் "திருமண சீசன்" விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக திருமணம் தொடர்பான இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் திருமண விழாக்களை மிகவும் சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் மாற்றும் பாரம்பரியமான சடங்குகளின் அழகை காட்டும் வீடியோக்களும், போட்டோக்களும் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

இருப்பினும், ஒரு திருமண விழாவில் கலந்தது கொண்ட விருந்தினர்களால் பகிரப்படும் எல்லா வீடியோக்களுமே மற்றும் எல்லா புகைப்படங்களுமே நம் மனதைக் கவருவதில்லை, எல்லாமே வேடிக்கையானவைகளாக இருப்பதில்லை. சில நேரங்களில் சில சங்கடமான திருமண நிகழ்வுகளின் வீடியோ கிளிப்புகளும் ஆன்லைனில் வெளியாகி வைரல் ஆகின்றன.

அப்படியாக மணமேடையில் மணமக்கள் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மணமேடையில் மணமக்கள் ஒருவொருக்கு ஒருவர் அன்பை பரிமாறி கொள்வதை பார்த்திருப்பபோம். ஆனால் இவர்கள் ஹூக்கா புகையை தங்களுக்குள் பரிமாறி கொள்கிறார்கள். இந்த வீடியோவில் வரும் மணமகள் ஹூக்காவை புகைத்த பின் மணமகனுக்கு வாய் வழியாக பரிமாறி கொள்கிறார். அதனை பெற்ற மணமகனும் ஸ்டைலாக புகையை வெளியே விடுகிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Laiba Waseem (@laiba._waseem)இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் மணமக்களின் செயல் முகம்சுழிக்க வைப்பது போல் உள்ளது என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. ஹூக்கா காதலர்கள் திருமணம் செய்து கொண்டால் இப்படி தான் நடக்கும் என்று கேப்ஷனில் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Trends, Viral