உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தினுடைய (Chenab bridge) ஆர்ச்சின் மனதை மயக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கிறார்.
அந்த அற்புத ஃபோட்டோவிற்கு "மேகங்களையும் தாண்டி காட்சி தரும் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தின் வளைவு" என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். மத்திய அமைச்சர் ஷேர் செய்து இருக்கும் குறிப்பிட்ட ஃபோட்டோவில், பின்னணியில் மலைகள் உயரமாக நிற்பதால், பாலம் மேகங்களுக்கு மேலே வளைந்து இருப்பதை காண முடிகிறது.
Chenab bridge-ன் ரம்மியமான இந்த ஃபோட்டோவை Koo app-ல் ஷேர் செய்து இருக்கிறார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். செனாப் பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள Reasi மாவட்டத்தில் பக்கல் (Bakkal) மற்றும் கவுரி (Kauri) இடையே இந்த செனாப் ரயில் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் செனாப் ஆற்றில் இருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மேலும் Chenab bridge பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரம் கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ராவும், தனது சோஷியல் மீடியாவில் செனாப் ரயில் பாலத்தின்ஃபோட்டோக்களை ஷேர் செய்து உள்ளார். "ஜம்மு & காஷ்மீரின் Reasi-ல் உள்ள இந்த 1315 மீ நீளமுள்ள செனாப் பாலத்தினுடைய ஆர்ச்சின் அற்புதமான படம். இந்த பாலம் உண்மையிலேயே ஒரு பொறியியல் அதிசயம். ஆற்றின் படுகை மட்டத்திலிருந்து 359 மீ உயரத்தில் இந்த பாலம் நிற்கும். ஈபிள் கோபுரத்தை விட உயரமாக இருக்கும் இந்த பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பாலத்தின் கட்டமைப்பு விவரங்களுக்கு அதிநவீன டெக்லா மென்பொருள் (Tekla software) பயன்படுத்தப்பட்டுள்ளது. செனாப் பாலத்தின் அசத்தலான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. ஒரு யூஸர், "ஆஹா... கட்டடக்கலையின் அற்புதமான சாதனை" என்று கமெண்ட் செய்துள்ளார். உலகின் மிக உயரமான ரயில் பாலத்தின் ஆர்ச் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.1,486 கோடி செலவில். இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் Chenab bridge ரயில் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.