Home /News /trend /

இளம்பெண்ணுக்கு பிறந்த ட்வின்ஸ்... அப்பாவும் இருவர் என்பதால் மருத்துவர்கள் அதிர்ச்சி

இளம்பெண்ணுக்கு பிறந்த ட்வின்ஸ்... அப்பாவும் இருவர் என்பதால் மருத்துவர்கள் அதிர்ச்சி

இரட்டைக் குழந்தைகள்

இரட்டைக் குழந்தைகள்

Twins | பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது ஆனால் இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறு தந்தைகள் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பிரேசிலை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் ஆனால் DNA பரிசோதனையில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் இரு வேறு தந்தைகள் காரணம் என்ற செய்தி மருத்துவர்களை மட்டும் இன்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அவ்வளவு ஏன் இது அந்த பெண்ணிற்கே அதிர்ச்சியான விஷயமாக தான் உள்ளது. அந்தப் பெண் ஒரே நாளில் இரு வேறு ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். இதனால் கருவுற்ற அவர் சரியாக 9 மாதங்கள் கழித்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அப்போது இதைப் பற்றி அதிகமாக யோசிக்காத அந்த பெண்மணி குழந்தைகளுக்கு ஒரு வயது நிரம்பியவுடன் அவர்களின் முதல் பிறந்தநாள் அன்று, அந்த இருவரில் யார் உயிரியல் ரீதியான தந்தை என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள விரும்பிய அவர் DNA பரிசோதனை மேற்கொண்டுள்ளார். உண்மையாகவே அவருக்கு தந்தையாக இருக்க வேண்டும் என்று தோன்றிய நபருடைய DNA வையும், அதே நாளில் உடலுறவு வைத்துக் கொண்ட இன்னொரு நபரின் DNA வையும் வைத்து குழந்தைகளின் DNA-வுடன் பரிசோதித்துள்ளனர்.



அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இத்தனை நாள் இவர் தான் தந்தையாக இருக்கக்கூடும் என்று நம்பிய நபரின் DNA ஒரே ஒரு குழந்தையின் DNA-வுடன் மட்டுமே ஒத்து போனது. மற்றொரு குழந்தையின் DNA ஆனது அதே நாளில் அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்ட இன்னொரு நபரின் DNA - வுடன் ஒத்து போனது இதன் மூலம் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு, இரு வேறு தந்தைகள் எனும் அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Also Read : வீட்டுக்குள் புகுந்த கரடி - கேக் சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் குளித்து குதூகலம்.! வைரல் வீடியோ

இதைப் பற்றி மருத்துவர்கள் கூறுகையில், “இது மிகவும் அதிர்ச்சியான சம்பவம் தான் எனினும், இதற்கு முன்னரும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதாவது மாதவிடாயின் போது அந்த பெண்ணின் கருப்பையில் உள்ள இரண்டாவது முட்டை வெளிவரும்போது, அந்த சமயத்தில் அந்தப் பெண் உடலுறவு கொள்வதினால், உயிரனுவானது அந்த கருமுட்டையை கருவுறச் செய்வதால் இப்படி நடக்கிறது. இதை அறிவியல் ரீதியாக ஹெட்ரோபேரண்டல் சூப்பர்பெகண்டேஷன் (heteroparental superfecundation) என்று அழைப்போம் என தெரிவித்தனர்.

Also Read : 29 பேரா.. சங்கடமா இருக்காது?.. கின்னஸ் சாதனைக்காக அரங்கேறிய சம்பவம்! 

இதைப் பற்றி அந்தப் பெண்ணின் மருத்துவர் டாக்டர் துளியோ ஜோர்ஜ் பிராங்கோ, என்பவர் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஒரே தாயிடம் இருந்து பெறப்படும் இரண்டு கரு முட்டைகளில் இரண்டு நபர்களுடைய உயிர் அணுக்கள் துளைத்து கருவுற செய்வது என்பது சாத்தியமான ஒன்றுதான் எனவும், பிறக்கும் அந்த குழந்தைகளானது தாயின் மரபணுவை கொண்டிருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் இவ்வாறு நடப்பது மிக மிக அசாதாரணமான ஒரு நிகழ்வு, இதுவரை உலகத்தில் மொத்தமாகவே 20 சம்பவங்கள் தான் இதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பதில் அளித்தார்.
Published by:Selvi M
First published:

Tags: Trending, Twins

அடுத்த செய்தி