ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பார்த்தாலே பகீர்னு இருக்கு.. கண்விழிகளை உருட்டி மிரட்டும் பிரேசிலியர்.! கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்.!

பார்த்தாலே பகீர்னு இருக்கு.. கண்விழிகளை உருட்டி மிரட்டும் பிரேசிலியர்.! கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்.!

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

Guinness World Record | பிரேசிலைச் சேர்ந்த சிட்னி டி கார்வால்ஹோ மெஸ்கிடா (Sidney de Carvalho Mesquita) என்ற நபர் தனது வித்தியாசமான திறமை மூலம் உலகசாதனை படைத்து பலரையும் வியக்க வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டியோ சிகோ என்று குறிப்பிடப்படும் பிரேசிலைச் சேர்ந்த சிட்னி டி கார்வால்ஹோ தனது ஐ-பாப்பிங் டேலன்ட் மூலம் கின்னஸ் உலகசாதனை படைத்து உள்ளார். கண்களுக்குள் இருந்து (இமைகளை விட்டு) தனது 2 விழிகளையும் நீண்ட தூரம் வெளியே தள்ளி இந்த மிரட்டலான சாதனையை பதிவு செய்து இருக்கிறார் சிட்னி டி கார்வால்ஹோ.

இவர் உலக சாதனைக்காக தனது கண் இமைகளை தாண்டி சுமார் 18.2 மிமீ அதாவது 0.71 இன்ச் வரை தனது கண் விழிகளை வெளியே தள்ளி இருக்கிறார்.பிரேசிலின் சாவ் பாலோ என்ற இடத்தில இவர் நிகழ்த்திய இந்த சாதனை ஒரு ஆப்டோமெட்ரிஸ்ட் நிபுணர், ப்ராப்டோமீட்டர் (proptometer) எனப்படும் டிவைஸை பயன்படுத்தி அவரது விழிகள் எவ்வளவு தூரம் முன்னோக்கி நீண்டிருக்கிறது என்பது அளக்கபட்டது.

இந்த விசித்திர சாதனை படைத்துள்ள சிட்னி டி கார்வால்ஹோ தனது 9 வயது வயதில் கண்விழிகளை நீண்ட தூரம் வெளியே தள்ளுவதற்கான திறமை தன்னுள் இருப்பதை கண்டறிந்துள்ளார். சிறு வயதில் கண்ணாடி முன் நின்று முகத்தை அஷ்டகோணலாக்கி விளையாடி கொண்டிருப்போம் இல்லையா.! அது போன்றதொரு சந்தர்ப்பத்தில் தான் வேடிக்கை தனது கண்விழிகளை வெளியே தள்ளி விளையாடி கொண்டிருந்துள்ளார். இதை தனது உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் முன் அடிக்கடி செய்து காண்பித்துள்ளார்.

கண்ணை உருட்டி இவர் விழிகளை வெளியே தள்ளி கொண்டு வருவதை கண்ட பெற்றோர் துவக்கத்தில் ஏதேனும் ஆகி விட போகிறது என்ற பயம் மற்றும் கவலை கொண்டுள்ளனர். பின் கண் நிபுணரிடம் கூட்டி சென்று பரிசோதித்த போது பயப்பட ஏதும் இல்லை, இது அவரது திறமை தான் என்பது தெரியவந்தது. தனது சாதனை மற்றும் திறமை பற்றி கூறி உள்ள சிட்னி டி கார்வால்ஹோ, இது நிச்சயமாக எனக்கு கிடைத்துள்ள பெரிய கிஃப்ட். இது என் தந்தை, என் அம்மா மற்றும் என்னை படைத்த இறைவனிடமிருந்து வந்தது. இதற்காக நான் எந்த ஸ்பெஷல் பயிற்சியும் பெறவில்லை. பல ஆண்டுகளாக எனது இந்த திறமையை நானே மெருகேற்றி கூர்மைப்படுத்தி கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் தனது கண் விழிகளை கண்களை விட்டு வெளியே தள்ளி மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் போதெல்லாம் ஒரு சில நொடிகள் தனது பார்வையை இழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : வனத்திற்குள் மறைந்திருக்கும் கொரில்லா எங்கே.? 12 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் மேதாவி தான்.!

தன்னால் 20-30 வினாடிகள் வரை விழிகளை கண்களை விட்டு வெளியே வைத்திருக்க முடியும் என்று கூறி இருக்கும் இவர், கண்களை பாதுகாக்க நிபுணரின் ஆலோசனையின் பேரில் கண் சொட்டு மருந்து பயன்படுத்தி பராமரிப்பதாகவும் கூறி இருக்கிறார். கண் விழிகளை பாப்பிங்-அப் செய்யும் போது தனக்கு வலிக்காது என்றும், ஆனால் சிறிது எரிச்சல் உணர்வு ஏற்படும் என்றும் கூறி இருக்கிறார்.

Published by:Selvi M
First published:

Tags: Guinness, Trending, Viral Video, World record