Video | மகளைப் போல் வேடமிட்டு சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற கேங்ஸ்டர்!

news18
Updated: August 6, 2019, 10:06 AM IST
Video | மகளைப் போல் வேடமிட்டு சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற கேங்ஸ்டர்!
மகளைப் போல வேடமிட்ட கேங்ஸ்டர்
news18
Updated: August 6, 2019, 10:06 AM IST
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேங்ஸ்டர் ஒருவர், தனது மகள் போல் வேடமிட்டு தப்ப முயன்று தோல்வி அடைந்த சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள சிறையில், க்ளவினோ டா சில்வா என்கிற கேங்லீடரும் அடைக்கப்பட்டுள்ளார் இவரை பார்க்க இவரது மகள் சமீபத்தில் சிறைக்கு சென்றார்.

அதன் பின் அவரது மகள் போலவே முகம், தலை முடி விக், ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் அணிந்து ஒருவர் பதட்டத்துடன் வெளியே செல்ல முயன்றார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சிறை அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். அப்போதுதான் சில்வா தனது மகள் போல வேடமிட்டு வெளியே தப்ப முயன்றது தெரியவந்தது.

தனது மேக்கப்பை கலைத்து சில்வா ஆணாக மாறுவதை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். சில்வாவை பாதுகாப்பு அதிகம் நிறைந்த மற்றொரு சிறைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். மேலும், அவர் தப்பிக்க அவரது மகள் உதவினாரா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...