Home /News /trend /

சல்லி சல்லியா நொறுக்கிட்டிங்களே! ஷோரூமிலிருந்து எடுத்த சில நிமடங்களிலேயே நொறுங்கிய கார்..

சல்லி சல்லியா நொறுக்கிட்டிங்களே! ஷோரூமிலிருந்து எடுத்த சில நிமடங்களிலேயே நொறுங்கிய கார்..

Viral News : ஷோரூமில் இருந்து 3 கிமீ தொலைவில் தனது புத்தம் புதிய ஃபெராரி காரை ஒட்டி சென்ற போது, அது விபத்துக்குள்ளாக்கி உள்ளது.

Viral News : ஷோரூமில் இருந்து 3 கிமீ தொலைவில் தனது புத்தம் புதிய ஃபெராரி காரை ஒட்டி சென்ற போது, அது விபத்துக்குள்ளாக்கி உள்ளது.

Viral News : ஷோரூமில் இருந்து 3 கிமீ தொலைவில் தனது புத்தம் புதிய ஃபெராரி காரை ஒட்டி சென்ற போது, அது விபத்துக்குள்ளாக்கி உள்ளது.

பொதுவாக நாம் எந்த ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றாலும் அதற்காக முன்கூட்டியே பல விதங்களில் திட்டம் போடுவோம். அந்த பொருள் இப்படி இருக்க வேண்டும், இவ்வளவு விலை இருக்க வேண்டும், இந்த தேதியில் வாங்க வேண்டும் என்பன போல பல திட்டங்களை நாம் வகுத்து கொள்வோம். சாதாரண பொருளுக்கே இப்படி என்றால், விலை அதிகம் கொண்ட பொருட்களுக்கு நாம் இன்னமும் அதிகம் திட்டம் வகுப்போம்.

ஏனென்றால் நாம் கஷ்டப்பட்டு சம்பாத்தித்த பணத்தில் அதிக விலையில் ஒரு பொருளை வாங்க போகிறோம் என்கிற கவனம் நமக்கு பொதுவாக இருக்கும். மேலும் இப்படி வாங்கும் பொருளை நாம் மிகவும் ஜாக்கிரதையாக பார்த்து கொள்வோம்.

ஆனால், இங்கு ஒருவர்  அதிக விலை கொடுத்து வாங்கிய காரை சுக்கு நூறாக நொறுக்கி உள்ளார். அதிக செயல்திறன் கொண்ட வாகனங்களை ஓட்டுவதற்கு நாம் எல்லோரும் ஆசைப்படுவோம். அதே போன்று அவற்றை வாங்கி விட வேண்டும் என்கிற கனவும் நமக்கு இருக்கும். இப்படி தனக்கு இருந்த கனவை நினைவாக்க பிரிட்டிஷ் சேர்ந்த ஒருவர் ஃபெராரி கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

also read : மகனுக்காக தந்தை செய்த தரமான செயல்..3 மாத உழைப்பு.. ரூ.8 லட்சத்தில் உருவான அற்புதம்!

ஷோரூமில் இருந்து 3 கிமீ தொலைவில் தனது புத்தம் புதிய ஃபெராரி காரை ஒட்டி சென்ற போது, அது விபத்துக்குள்ளாக்கி உள்ளது. டெர்பிஷையர் சாலை காவல்துறையின் ட்விட்டர் பதிவின்படி, இரண்டு மைல்களுக்குப் அப்பால் (3.2 கிலோமீட்டர்) ஃபெராரி கார் ஒன்று விபத்துக்குள்ளானது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தின்படி, இந்த ஃபெராரி 488 மாடல் காரின் முன்பகுதியில் அதிக சேதமடைந்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தில் ஃபெராரி கார் மட்டும் தனியாக இருப்பது போல் தோன்றியதால், என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

also read : சாப்பிட்டதால் சாதனை படைத்த பிரிட்டன் பெண் - வைரல் வீடியோ!

இந்த காரின் முன்பக்கம், பானெட் மற்றும் அதன் ஹெட்லைட்களைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. மைலேஜைப் பொறுத்து ஃபெராரி 488 மாடலானது (ரூ. 1.13 கோடி முதல் ரூ. 2.27 கோடி) அதிக விலை என்பதால், இதற்கு ஏற்பட்டுள்ள சேதமானது அதிகமானது. ஃபெராரி 488 ஆனது 3.9-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினை இது கொண்டுள்ளது. இது 670 PS ஆற்றலையும் 760 Nm முறுக்கு விசையையும் உற்பத்தி செய்கிறது.

மேலும் ஃபெராரி 488 மாடல் 3 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மணிக்கு 361 கி.மீ வேகத்தில் செல்ல கூடிய ஆற்றலும் இதற்குண்டு.
ஷோரூமிலிருந்து வெளியே வந்தவுடனே இந்த புதிய ஃபெராரி கார் விபத்துக்குள்ளானது தான் இதில் மிகவும் வருத்தமான விஷயமாகும். பொதுவாக இது போன்ற சூப்பர் கார்களை டிரைவருக்கு ஒட்டிய அனுபவம் இல்லையென்றால் இது போன்ற விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral

அடுத்த செய்தி