ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

10 வினாடிகளில் உங்களால் இந்த பிரெயின் டீஸரில் உள்ள தவறை கண்டுபிடிக்க முடியுமா.?

10 வினாடிகளில் உங்களால் இந்த பிரெயின் டீஸரில் உள்ள தவறை கண்டுபிடிக்க முடியுமா.?

பிரெயின் டீஸர்

பிரெயின் டீஸர்

Brain Teaser | கீழே நீங்கள் பார்க்க போகும் பிரெயின் டீஸர் இமேஜில் மறைந்திருக்கும் தவறை உங்களால் வெறும் 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சோஷியல் மீடியாக்களில் ஆப்டிகல் இல்யூஷன்கள் மற்றும் பிரெயின் டீஸர்கள் பெரும் வரவேற்பை பெற்று எளிதில் வைரலாகி விடுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன்கள், பிரெயின் டீஸர்கள் என இரண்டுமே மூளை மற்றும் கண்களுக்கு ஓரே நேரத்தில் வேலை கொடுக்க கூடியவையாக இருப்பதால் அதை தீர்ப்பதில் தனி சுவாரஸ்யம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சோஷியல் மீடியாக்களில் ஆப்டிகல் இல்யூஷன்களும், பிரெயின் டீசர்களும் போட்டி போட்டு கொண்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகின்றன. ஒருபக்கம் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்கள் கடினமான சவாலை கொண்டிருக்கும் நிலையில், பிரெயின் டீசர்கள் எளிய புதிர்களை கூட மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன. பனிமனிதர்களின் மத்தியில் ஒளிந்திருக்கும் பூனைகள் அல்லது ஃபாண்டாக்கள் மத்தியில் மறைந்திருக்கும் ஆந்தைகளை கண்டுபிடிக்கச் சொல்லும் பிரபலமான இந்த இன்டர்நெட் புதிர்களுக்கு மத்தியில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு பிரெயின் டீஸர் நமது ஃபாஸ்ட் ரீடிங் ஸ்கில்-ஐ டெஸ்ட் செய்கிறது. ஒரு நபர் எவ்வளவு புத்திசாலியானவர் என்பதை கண்டுபிடிப்பதற்கு பல விதமான IQ சோதனைகள் இருக்கின்றன.

அந்த வகையில் வேகமாக வாசிக்கும் போது தவறுகளை கண்டு பிடிக்கும் திறன், நீங்க எவ்வளவு நுணுக்கமான நபர் என்பதை வெளிப்படுத்தும். நீங்கள் இப்போது பார்க்க போகும் பிரெயின் டீஸர் இமேஜ் இத்தகையது தான். இதன்படி கீழே நீங்கள் பார்க்க போகும் பிரெயின் டீஸர் இமேஜில் மறைந்திருக்கும் தவறை நீங்கள் வெறும் 10 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் ஷார்ப்பானவர் என்றால் இந்த புதிருக்கான விடையை உண்மையில் பத்தே வினாடிகளில் கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால் பதில் மிகவும் எளிமையானது தான். ஆனால் சற்று ட்ரிக்கியானது.

மேலே உள்ள இமேஜை நீங்கள் எப்படியும் இந்நேரம் பலமுறை பார்த்திருப்பீர்கள். என்னடா இது 1-லிருந்து 9 வரை எல்லா நம்பர்களும் கரெட்டாக இருக்கிறதே. இதில் என்ன தவறு இருக்கிறது என்று சிலமுறை செக் செய்த பிறகு உங்களுக்கு தோன்றி இருக்கும். ஆனால் ட்விஸ்ட் வேறொன்று, அதை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இன்னொரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் மேலே குறிப்பிட்ட இமேஜில் உள்ள தவறை அடையாளம் காண வேண்டும் என்றால் பல கலர்களில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்பர்களை எத்தனை முறை வரிசையாக எண்ணி பார்த்தாலும் வேலைக்கு ஆகாது.

Also Read : உங்கள் குணத்தைச் சொல்லும் உங்களது தலை வகிடு.. நீங்க இதுல எந்த ஸ்டைல்?

உங்களுக்கான ஹின்ட் மேலே உள்ள இமேஜில் இருக்கும் கேள்வியை நன்றாக படித்து பாருங்கள் என்பதே. முதலில் நீங்கள் உடனடியாக தவறை கவனித்திருக்க மாட்டீர்கள். ஆனால் நாங்கள் கொடுத்த க்ளூவை கொண்டு இப்பொது சில வினாடிகளுக்குள் கேட்கப்பட்ட கேள்வியில் உள்ள தவறை உங்களால் சரியாக அடையாளம் கண்டிருக்க முடியும் என்று நம்புகிறோம். ஒருவேளை உங்களால் இப்போதும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கீழே விடையை தெரிந்து கொள்ளுங்கள்.

Also Read : 30 வினாடிகள் டைம்.. பாலைவனத்தில் ஒளிந்திருக்கும் குதிரையை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ்.!

இந்த பிரெயின் டீஸர் இமேஜில் உள்ள தவறை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.? என்பது தானே கேள்வி தவிர நம்பர்களில் உள்ள தவறை கண்டுபிடிக்க முடியுமா என்பது கேள்வியல்ல.. இப்போது விடையை பாருங்கள்..

ஆகவே இந்த பிரெயின் டீஸர் புதிருக்கான விடை இமேஜில் உள்ள கேள்வியில் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கும் "the" என்பதாகும்.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Tamil News, Trending