Home /News /trend /

99 சதவீதம் பேர் தோல்வி... ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி இந்த கணக்கை சமன் செய்ய முடியுமா.?

99 சதவீதம் பேர் தோல்வி... ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி இந்த கணக்கை சமன் செய்ய முடியுமா.?

Brain Teaser

Brain Teaser

Brain Teaser Puzzle | பிரெயின் டீஸர்கள் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க கூடியவையாக இருக்கின்றன. பிரெயின் டீஸர் சவால்களை தீர்ப்பது மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நம்முடைய நினைவாற்றலை வலுவாக வைத்திருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் ஆப்டிக்கல் இல்யூஷன்களை விட பிரெயின் டீஸர் பற்றிய சவால்களுக்கு மவுசு கூடி வருகிறது. ஆப்டிக்கல் இல்யூஷன்கள், பிரெயின் டீஸர் என இரண்டுமே கண்களுக்கும், மூளைக்கும் ஓரே நேரத்தில் அதிக வேலை கொடுக்க கூடியவையாக இருக்கின்றன.

ஆனால் பிரெயின் டீஸர்கள் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க கூடியவையாக இருக்கின்றன. பிரெயின் டீஸர் சவால்களை தீர்ப்பது மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நம்முடைய நினைவாற்றலை வலுவாக வைத்திருக்கிறது. தவிர சவாலில் இறங்கும் நபரை மிகவும் சுறுசுறுப்பாக மற்றும் உற்சாகமாக வைக்கிறது.

இன்று நாம் தீக்குச்சியை வைத்து தீர்க்க கூடிய ஒரு ஈஸியான அதே நேரத்தில் மூளைக்கும், கண்ணுக்கும் அதிக வேலை கொடுக்க கூடிய பிரெயின் டீஸரை பார்க்கப்போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை நன்றாக உற்றுப்பாருங்கள். அந்த கணக்கை சமன் செய்ய நீங்கள் ஒரே ஒரு தீக்குச்சியை ஒருமுறை மட்டுமே நகர்த்த வேண்டும். இதில் மற்றொரு கன்டிஷன் என்னவென்றால் இந்த பிரெயின் டீஸரை கண்டுபிடிக்க உங்களுக்கு 25 விநாடிகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.



இந்த புதிரில் உள்ள சமன்பாடு 5+9=9 என உள்ளது. 5 மற்றும் 9-ன் கூட்டுத்தொகை 14 ஆயிற்றே, அது எப்படி 9 வரும் என யோசிக்கலாம். அங்கே தான் இருக்கு ட்விஸ்ட்டே, இதில் ஒவ்வொரு எண்ணும் தீக்குச்சியை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்துவதன் மூலமாக, 25 விநாடிகளுக்குள் நீங்கள் கணக்கை சமன் செய்ய வேண்டும்.

Also Read : மனித முகங்களுக்கு நடுவே மறைந்திருக்கும் பூனை... இதை மட்டும் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்

மூளையை கசிக்கிப் பிழிந்தும் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?. கவலையை விடுங்கள் உங்களுக்கான குறிப்பு ஒன்றை தருகிறோம். சமன்பாடுகளைச் சரியாகப் பெறுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அடிப்படைக் கணிதம் மட்டுமே. அதற்கான தீர்வுகளையும் அதன் விளக்கத்தையும் இப்போது பார்க்கலாம்.

Also Read : என்ன கேலி செய்தாலும் பரவாயில்லை - முறுக்கு மீசை வைத்துக் கெத்தாக வலம் வரும் கேரள பெண் ஷைஜா!

சமன்பாட்டி இடது புறம் உள்ள 9 இலிருந்து ஒரு தீக்குச்சியை எடுத்தால் 3 ஆக மாறிவிடும், அதனை வலது பக்கத்தில் உள்ள 9 என்ற எண்ணில் வைத்தால் தற்போது விடை 8 என காண்பிக்கும், 5 உடன் 3-யைக் கூட்டினால் கூட்டுத்தொகை 8 என்பது சரியானது ஆகும். இப்போது ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி விடையை கண்டுபிடித்துவிட்டோம். இதுவரை உங்களுக்கு புரியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்து விடையை சரி செய்து கொள்ளுங்கள்.



ஆப்டிக்கல் இல்யூஷன்கள் ஆளுமை பண்புகள், குணநலன்கள், நட்பு வட்டம், திறமைகள் ஆகியவற்றை ஆராய பயன்படுவது போல், புதிர் விளையாட்டான பிரெயின் டீஸர் பெரும்பாலும் மறைமுக மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையால் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறமை, பிரச்சனைகளை தீர்ப்பது போன்றவற்றை கணிக்க உதவுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Trending

அடுத்த செய்தி