Home /News /trend /

11 விநாடிகள் தான் டைம்; இந்த போட்டோவில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியுமா?

11 விநாடிகள் தான் டைம்; இந்த போட்டோவில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியுமா?

மூளையின் IQ அளவு அதிகமாக இருக்கும் புத்திசாலிகளால் மட்டுமே இதனை கண்டுபிடிக்க முடியும்

மூளையின் IQ அளவு அதிகமாக இருக்கும் புத்திசாலிகளால் மட்டுமே இதனை கண்டுபிடிக்க முடியும்

மூளையின் IQ அளவு அதிகமாக இருக்கும் புத்திசாலிகளால் மட்டுமே இதனை கண்டுபிடிக்க முடியும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆப்டிகல் இல்யூஷன்களைப் போலவே சோசியல் மீடியாவில் பிரெயின் டீசர் புதிர் விளையாட்டுக்களும் அதிக கவனம் ஈர்த்து வருகின்றன. ஏனெனில் பிரெயின் டீசர்கள் அனைத்தும், எளிய புதிர்களைக் கூட சுவாரஸ்யமாக்குவதோடு, ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும் உதவுகிறது. பிரெயின் டீசர் சம்பந்தமான சவால்களுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், நீங்கள் ‘அவுட் ஆப் தி பாக்ஸ்’ எனப்படும் குறுகிய மனநிலையை விட்டு பரவலாக சிந்திக்கும் மனநிலைக்கு வர வேண்டும். புதுமையான கோணத்தில் பகுப்பாய்வு செய்து, ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் மட்டுமே இந்த புதிர் விளையாட்டிற்கான விடையை கண்டுபிடிக்க முடியும்.

அப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய பிரெயின் டீசரைத் தான் இன்று உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள போட்டோவில் பதிவாகியுள்ள பீட்சா பார்ட்டியில் யாருக்கும் தெரியாமல் 6 வார்த்தைகள் மறைந்திருக்கின்றன. அதனை கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் கண்டறிய வேண்டும் என சவால் விடுக்கப்பட்டுள்ளது.



பார்ட்டிக்குள் பதுங்கியிருக்கும் வார்த்தைகள்:

மேலே உள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள், ஒரு அறையில் பீட்சா பார்ட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதில் சமையற்கலைஞர் ஒருவர் சிறுவனுக்கு அவன் கேட்ட பீட்சாவை தயாரித்துக்கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் ஒருவர் பியானோ வாசித்து கொண்டிருக்கிறார். பள்ளிச் சிறுவர்கள் இரண்டு மேஜைகளில் அமர்ந்து பீட்சா சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு பணிப்பெண் பீட்சா மற்றும் கூல்டிரிங்ஸை பரிமாறி கொண்டிருக்கிறார். இதுபோன்ற பலதரப்பட்ட காட்சிகள் அடங்கியுள்ள போட்டோவில் 6 ஆங்கில வார்த்தைகள் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் மறைந்துள்ளன. அந்த வர்த்தைகளையும் 11 விநாடிகளுக்கு உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? என சவால் விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ | மீனுக்கு உணவளிக்கும் வாத்து; இனிமேல் “வாத்து மடையா” என்று யாரையும் திட்டாதீர்கள்!

மூளையின் IQ அளவு அதிகமாக இருக்கும் புத்திசாலிகளால் மட்டுமே இதனை கண்டுபிடிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டோவை மேலோட்டமாக பார்த்தால், ஒரு வார்த்தைகளைக் கூட கண்டறிய முடியாது. கண்ணையும், கவனத்தையும் முழுமையாக செலுத்தினால், சில வார்த்தைகள் முதலில் உங்கள் கண்களில் பட வாய்ப்புள்ளது.

அச்சச்சோ.. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் எவ்வளவு முயன்றும் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?... கவலையை விடுங்கள். உங்களுக்கான விடைகளை நாங்களே தெரிவிக்கிறோம்.



பிரெயின் டீசருக்கான விடைகள்:

1. சீஸ் (Cheese) - சீஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கான எழுத்துக்கள் பியானோ வாசிக்கும் நபரின் தலைக்கு மேல் தொங்கும் விளக்கில் மறைந்துள்ளது.

2. பார்ட்டி (Party) - பியானோ வாசிப்பவர் வைத்திருக்கும் மியூசிக்கல் நோட்ஸை நன்றாக உற்றுப்பார்த்தால், அதில் பார்ட்டி என்பதைக்குறிக்கும் ஆங்கில எழுத்துக்கள் மறைந்திருப்பதைக் காணலாம்.

3. ரெட் (Red) - பணிப்பெண் கையில் இருந்து சிதறி விழும் கூல்டிரிங்ஸில் RED என்ற வார்த்தை மறைந்துள்ளது.

4. ஹங்கிரி (Hungry) - பசியை குறிக்கூடிய Hungry என்ற வார்த்தை சுவற்றில் மாட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது.

5. யம்மி (Yummy) - பீட்சாவின் சுவை சூப்பராக உள்ளதைக் குறிக்கும் Yummy என்ற வார்த்தை மேஜையில் சாப்பிட்டு கொண்டிருக்கும் சிறுமியின், ஆரஞ்சு நிற தலைமுடியில் மறைந்துள்ளது.

6. மியூசிக் (Music) - ஆரஞ்சு நிற கூந்தல் கொண்ட சிறுமிக்கு எதிரே அமர்ந்திருக்கும் சிறுவனின் கால் சட்டையில் மியூசிக் என்ற வார்த்தை ஒளிந்து கொண்டிருப்பதை காணலாம்.
Published by:Anupriyam K
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி