முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்த படத்தில் காலியாக இருக்கும் 5 பாட்டில்களை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

இந்த படத்தில் காலியாக இருக்கும் 5 பாட்டில்களை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

பிரெயின் டீஸர்

பிரெயின் டீஸர்

Brain Teaser | நம் பார்வை மற்றும் கவனிக்கும் திறனை மேம்படுத்த கூடிய பிரெயின் டீஸர் இமேஜ் ஒன்றை தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சோஷியல் மீடியாக்களில் பொழுதுபோக்கு மற்றும் விசித்திரமான நிகழ்வுகள் எப்படி வைரலாகிறதோ அதே போல புதிர்கள் மற்றும் சவால்களும் வைரலாகி வருகின்றன. நல்ல டைம் பாஸ் செய்ய உதவும் சுவாரசியமான புதிர்கள் உலகளவில் உள்ள நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாவது இப்போது சகஜமாகி விட்டது.

புதிர்கள் அல்லது சவால்கள் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன்கள் மற்றும் பிரெயின் டீஸர்கள் நமது பார்வை திறன், மூளை திறன் மற்றும் கவனிக்கும் திறனை மேம்படுத்துகின்றன. பிரெயின் டீஸர்கள் மூலம் விடுக்கப்படும் சவால்களை வெற்றிகரமாக தீர்க்க முயற்சிப்பது நம் மூளை மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மேலும் நம்மை மிகவும் சுறுசுறுப்பாக மற்றும் உற்சாகமாக்குகிறது.

தற்போது நம் பார்வை மற்றும் கவனிக்கும் திறனை மேம்படுத்த கூடிய பிரெயின் டீஸர் இமேஜ் ஒன்றை தான் பார்க்க இருக்கிறோம். இந்த பிரெயின் டீஸரை டுடால்ஃப் என்று அழைக்கப்படும் பிரபல ஹங்கேரிய கலைஞரான ஜெர்கெலி டுடாஸ் தனது ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து இருக்கிறார். இந்த பிரெயின் டீஸர் பச்சை கண்ணாடி பாட்டில்கள் நிறைந்த கடலில் மூன்று டால்பின்கள் இருப்பதை காட்டுகிறது. அதில் ஒரு டால்பினின் கையில் இருக்கும் காகிதம் ஒன்றில் Don't litter என்று எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் "குப்பை போடாதே" என்பதாகும். பொது இடத்தில் அல்லது நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த இதன் மூலம் அந்த டால்பின் வியூவர்ஸ்க்கு அறிவுறுத்துகிறது.

Also Read : பாவம் இந்த முதியவருக்கு அவரது மனைவியை கண்டுபிடிக்க உதவ முடியுமா.?

இப்போது சவால் என்னவென்றால் டால்பின்களை சுற்றி கடலில் மிதக்கும் கிளாஸ் பாட்டில்களில் சுருட்டப்பட்ட காகிதம் உள்ளே உள்ளது. ஆனால் இவற்றில் 5 பாட்டில்கள் உள்ளே எதுவும் இன்றி காலியாக இருக்கின்றன. அவற்றை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே சவால், இதற்கு குறிப்பிட்ட நேரம் எதுவும் கெடுவாக கொடுக்கப்படவில்லை என்றாலும் எவ்வளவு விரைவாக கண்டறிகிறோமோ அவ்வளவு ஷார்ப்பாக நாம் இருக்கிறோம் என தெரிந்து கொள்ளலாம்.

மேலே உள்ள இமேஜை நன்கு உற்று பார்த்தால் மட்டுமே உங்களால் சவாலில் ஜெயிக்க முடியும், ஏனென்றால் பச்சை மற்றும் நீல நிற நிழல்கள் முழு காட்சியை வண்ணமயமாக்குவதால் காலி பாட்டில்களை கண்டறிவது சற்று சிக்கலாக இருக்கும். ஆனால் இதையும் தாண்டி கண்டுபிடித்துவிடீர்கள் என்றால் நீங்கள் உண்மையில் ஷார்பான நபர் தான்.

Also Read : எனக்கு 60 அவருக்கு 30.. பழங்குடியின இளைஞருடன் அமெரிக்க பெண்ணுக்கு மலர்ந்த காதல்..!

ஆனால் உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கடலில் மிதக்கும் காலி பாட்டில்களை கண்டுபிடிக்க நீங்கள் இன்னும் சிரமப்படுகிறீர்களானால் அதற்கான தீர்வை கீழே கொடுத்துள்ளோம். பாருங்கள்...

இந்த பிரெயின் டீஸர் ஷேர் செய்யப்பட்டதில் இருந்து நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. பலரும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஒரு யூஸர் கூறுகையில் காலி பாட்டில்களை நான் மிக விரைவாகவே கண்டுபிடித்து விட்டேன், வேடிக்கையான பிரெயின் டீஸருக்கு நன்றி என குறிப்பிட்டு உள்ளார். பெரும்பாலான யூஸர்கள் 40 - 50 வினாடிகளில் இந்த புதிரை கண்டுபிடித்து விட்டதாக தெரிகிறது.

First published:

Tags: Optical Illusion, Trending