ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்க IQ எவ்வளவுன்னு பாக்கலாமா.? - இந்த தேதிகளில் இருக்கும் தவறைக் கண்டுபிடியுங்க.!

உங்க IQ எவ்வளவுன்னு பாக்கலாமா.? - இந்த தேதிகளில் இருக்கும் தவறைக் கண்டுபிடியுங்க.!

IQ சோதனை

IQ சோதனை

Brain Teaser - IQ Test | நாம் அன்றாடம் பார்க்கும் பல விஷயங்களில் ஏற்படும் சிறிய தவறு நம்முடைய கண்களுக்குத் தெரியாது. அதே போல ஒரு புகைப்படம் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு நபர் எவ்வளவு புத்திசாலியானவர் என்பதை கண்டுபிடிப்பதற்கு பல விதமான IQ சோதனைகள் இருக்கின்றன. கணிதத்திறன், தவறுகளைக் கண்டு பிடிக்கும் திறன், புதிர்கள் என்று சுவாரஸ்யமான, வித்தியாசமான மூளைக்கு வேலை என்று கூறப்படும் பல விதமான சவால்கள் நீங்க எவ்வளவு புத்திசாலியான நபர், எவ்வளவு நுணுக்கமான விஷயங்களை உங்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதையெல்லாம் தெளிவாகக் கூறிவிடும். சின்ன சின்ன விஷயங்களில் இருக்கும் தவறுகளை பலராலும் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. பின்வரும் புகைப்படத்தில் உள்ள மாதாந்திர தேதிகள், நாட்களில் ஒரு பிழை உள்ளது. நீங்கள் எவ்வளவு விரைவாக அந்த பிழையை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.

நாம் அன்றாடம் பார்க்கும் பல விஷயங்களில் ஏற்படும் சிறிய தவறு நம்முடைய கண்களுக்குத் தெரியாது. அதே போல ஒரு புகைப்படம் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. காலண்டர், மாதம், நாட்கள், வாரங்கள், கிழமைகள் என்று எல்லாமே நம்முடைய வாழ்வில் பின்னி பிணைந்துள்ளவை. ஆனால் இது ஒரு கேள்வியாக, ஒரு சவாலாக வரும்போது நாம் அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம், அதற்கு எவ்வாறு பதில் அளிக்கிறோம் அந்த பிழையை நம்மால் கண்டறிய முடியுமா? என்பதுதான் ஒரு நபரின் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது.

கீழே உள்ள புகைப்படத்தில் ஆறு மாதங்கள், ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தேதி கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த அளவுக்கு ஸ்மார்டாக இருக்கிறீர்கள் என்றும், உங்களுடைய ஐக்யூ எவ்வளவு அதிகமாக உள்ளது என்றும் இதன் மூலம் பார்க்கலாம். நீங்கள் மிகவும் புத்திசாலியானவராக இருந்தால், இதைப் பார்த்த சில நொடிகளிலேயே இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை உங்களால் சரியாக கண்டுபிடித்துவிட முடியும்.

புகைப்படத்தை நன்றாக பார்த்தவுடன் உங்களுக்கு என்ன பிழை இருக்கிறது என்பது தெரிந்ததா? இந்த கேள்வி கொஞ்சம் சவாலானதாக குழப்பமானதாக இருப்பதாக தோன்றலாம். ஆனால், புகைப்படத்தில் இருக்கும் தவறை மிக எளிதாக கண்டுபிடித்து விட முடியும். ஒருவேளை உங்களுக்கு இதில் என்ன பிழை இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் கீழே இதற்கான விடை இருக்கிறது.

Also Read : மகுடிக்கு மயங்காத பாம்பு.. 8 வினாடிகளில் இந்த படத்தில் இருக்கும் பாம்பை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

இந்த மூளைக்கு வேலை சவாலில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது என்னவென்று தெரிந்ததா? ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு தேதி உள்ளது. சரி இதில் என்ன பிழை இருக்குறது என்று ஒரு சிலருக்கு தோன்றும். உங்களால் இதில் இருக்கும் பிழையை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. எதில் பிழை உள்ளது என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கான ஒரு சின்ன க்ளூ! நீங்கள் கண்டுபிடிக்கவேண்டியது, ஒரு குறிப்பிட்ட மாதத்துடன் கொடுக்கப்பட்டுள்ள தேதி தவறானது. இப்போது விடை தெரிகிறதா என்று பாருங்கள். உங்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இந்த புதிருக்கான பதில் கீழே.

புதிருக்கான விடை: ஏப்ரல் மாதத்தில் 31 தேதி என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 30 தேதி தான் இருக்கும். 31 தேதி என்பதுதான் பிழை.

Published by:Selvi M
First published:

Tags: IQ Test, Trending