ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த ஆந்தை கூட்டத்தில் மறைந்திருக்கும் ஏலியன் ஆந்தையை உங்களால் ஐந்தே வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா.!

இந்த ஆந்தை கூட்டத்தில் மறைந்திருக்கும் ஏலியன் ஆந்தையை உங்களால் ஐந்தே வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா.!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Brain Teaser | நினைவாற்றலை மேம்படுத்துவதோடு படைப்பாற்றலையயும் தூண்ட செய்கின்றன பிரெயின் டீசர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நமது சிக்கல் தீர்க்கும் திறன்களை சிறப்பான நிலைக்கு எடுத்து செல்ல உதவுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சோஷியல் மீடியாக்களில் ஆப்டிகல் இல்யூஷன்களும், பிரெயின் டீசர்களும் போட்டி போட்டு கொண்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகின்றன. ஒருபக்கம் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்கள் கடினமான சவாலை கொண்டிருக்கும் நிலையில், பிரெயின் டீசர்கள் எளிய புதிர்களை கூட மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன.

ஆக்கப்பூர்வமான சிந்தனை மூலம் பிரெயின் கேம்ஸ்களுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால், அதிலிருக்கும் சவால்களை ஏற்று கொண்டு தீர்ப்பது நமது மூளை மற்றும் செல்களுக்கு இடையேயான தொடர்பை கூர்மையாக்கும். பொதுவாக பிரெயின் டீசர்கள் நமது மனம் சிந்திக்கும் திறனின் வேகத்தை மேம்படுத்துகின்றன. அதே போல குறுகிய கால நினைவாற்றலை அதிகரிக்க சிறப்பான வழியாகவும் இவை இருக்கின்றன. நினைவாற்றலை மேம்படுத்துவதோடு படைப்பாற்றலையும் தூண்ட செய்கின்றன பிரெயின் டீசர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நமது சிக்கல் தீர்க்கும் திறன்களை சிறப்பான நிலைக்கு எடுத்து செல்ல உதவுகிறது.

சரி இப்போது சற்று எளிதான பிரெயின் டீசரை உங்களுக்காக நாங்கள் இங்கே கொண்டு வந்துள்ளோம். தற்போது கீழே நீங்கள் பார்க்க போகும் பிரெயின் டீசரில், இருக்கும் 20 ஆந்தைகளில் வித்தியாசமான ஒரு ஆந்தை எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் இங்கு பார்க்க போகும் இமேஜில் பல வகை கலர்களை கொண்ட ஆந்தை கூட்டம் இருக்கிறது. தோற்றத்தில் அனைத்து ஆந்தைகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட இந்த 20 ஆந்தைகளில் ஒன்று மட்டும் சற்று வித்தியாசத்தை கொண்டுள்ளது. அது என்ன வித்தியாசம் என்பதை தான் நீங்கள் இப்போது கண்டுபிடிக்க வேண்டும்.

Also Read : மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய பதில் எளிதானது என்றாலும், பதிலை கண்டுபிடிக்கும் முயற்சியில் படத்தை நீங்கள் கவனமாக உற்று பார்த்தால் மட்டுமே சட்டென்று கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் இந்த படத்தில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க வெறும் 5 வினாடிகள் மட்டுமே நேரம் இருக்கிறது. இப்போது கீழே உள்ள இமேஜை பார்த்து 5 வினாடிகளில் புதிருக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்...

இந்த இமேஜில் இயல்பாக இருக்கும் ஆந்தையின் தோற்றத்தில் இல்லாமல் ஒரு ஆந்தை மட்டும் வித்தியாசமாக இருக்கும். பதிலை கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு க்ளூ தேவைப்படுகிறது என்றால் அதையும் உங்களுக்கு சொல்கிறோம். வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஆந்தை போல அது இருக்கும். மற்ற ஆந்தைகளிலிருந்து தனித்துவமான அல்லது வித்தியாசமான தோற்றம் கொண்ட பறவையாக இருக்கும் என்பதே இதன் பொருள்.

Also Read : ”செல்லத்தை தூக்கிட்டு வாங்க”... வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

பதில் ஈஸியானது என்றாலும் கூட அதை கண்டுபிடிக்கும் முயற்சியை சற்று கடினமாக்குவது கிட்டத்தட்ட அனைத்து ஆந்தைகளும் ஒன்று போலவே இருப்பது தான். சரி, பல வினாடிகள் எடுத்து கொண்டும் உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக கீழே விடை கொடுக்கிறோம். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பிற ஆந்தைகளுக்கு மூக்கு இருக்கும் நிலையில், இந்த ஆந்தைக்கு மட்டும் மூக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரெயின் டீசர்கள் எளிய புதிர்களை கூட மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன அல்லவா.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending