Home /News /trend /

இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ரியல் ஜீனியஸ்!

இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ரியல் ஜீனியஸ்!

பிரெயின் டீசர்

பிரெயின் டீசர்

Brain Teaser Puzzle | பிரெயின் டீசர்களில் மறைந்திருக்கும் புதிருக்கான விடையை கண்டுபிடிப்பவர்கள் எந்த விஷயத்தையும் பிறரை விட வேறு கோணத்தில் சிந்திக்கக்கூடியவர்கள், ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ என சொல்லக்கூடிய தீர்வுகளை கண்டறிய வழக்கமான வழிகளை சிந்திக்காமல் பல கோணங்களில் சிந்திக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சோசியல் மீடியாவில் இப்போது ஆப்டிகல் இல்யூஷனுக்கான அதே இடத்தை பிரெயின் டீசர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. ஆப்டிக்கல் இல்யூஷன்கள், பிரெயின் டீஸர் என இரண்டுமே கண்களுக்கும், மூளைக்கும் ஓரே நேரத்தில் அதிக வேலை கொடுக்க கூடியவையாக இருக்கின்றன. ஆனால் பிரெயின் டீஸர்கள் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க கூடியவையாக இருக்கின்றன. பிரெயின் டீஸர் சவால்களை தீர்ப்பது மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நம்முடைய நினைவாற்றலை வலுவாக வைத்திருக்கிறது. தவிர சவாலில் இறங்கும் நபரை மிகவும் சுறுசுறுப்பாக மற்றும் உற்சாகமாக வைக்கிறது.

பிரெயின் டீசர்களில் மறைந்திருக்கும் புதிருக்கான விடையை கண்டுபிடிப்பவர்கள் எந்த விஷயத்தையும் பிறரை விட வேறு கோணத்தில் சிந்திக்கக்கூடியவர்கள், ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ என சொல்லக்கூடிய தீர்வுகளை கண்டறிய வழக்கமான வழிகளை சிந்திக்காமல் பல கோணங்களில் சிந்திக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். இன்று முற்றிலும் சுவாரஸ்யமான ஒரு பிரெயின் டீசரைக் கொண்டு வந்துள்ளோம், அதில் வீட்டில் ஓய்வறையில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை 9 விநாடிகளுக்குள் கண்டறிய வேண்டும் என சவால் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய பிரெயின் டீசர் புகைப்படத்தில், குடும்பத்தினர் அனைவரும் தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் கழிப்பதற்காக லிவ்விங் ரூமில் கூடியுள்ளனர். அந்த புகைப்படத்தில் அப்பா, அம்மா இருவரும் சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்கின்றனர். மகன் மற்றொரு சோபாவில் படுத்துக்கொண்டும், மகள் கீழே படுத்தபடியும் அவர் அவருக்கு பிடித்த புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கின்றனர். அந்த குடும்பத்தினரின் செல்ல நாய் மற்றும் பூனைக்குட்டி கூட லிவ்விங் ரூமில் தான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. இப்படி அனைவரும் ஒன்று கூடியிருக்கும் இந்த அறையில் 6 ஆங்கில வார்த்தைகள் அங்காங்கே ஒளிந்துள்ளன. அதனை 9 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டுமென சவால் விடுக்கப்பட்டுள்ளது.



“இது என்ன பெரிய சவால், அசால்ட்டாக கண்டுபிடித்துவிடாலமே” என நீங்கள் நினைக்கலாம்... ஆனால் அது அவ்வளவு சுலபமான வேலை இல்லை என்பதால் போட்டோவை நன்றாக உற்றுப்பார்த்து முடிவெடுங்கள். இதற்கான ஒரே ஒரு குறிப்பு என்னவென்றால், 6 வார்த்தைகளுமே புத்தகம் மற்றும் வாசிப்புடன் தொடர்புடையது என்பதாகும்.

Also Read : நத்தைக்கு 4 மூக்கு, முதலைக்கு... விலங்குகள் குறித்து உங்களுக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்

விடையை கண்டறிவது எப்படி?

படத்தில் உள்ள லிவ்விங் ரூமை மேலோட்டமாக நோட்டமிட்டால், எந்த வார்த்தைகளும் உங்கள் கண்களுக்குப் புலப்படாது. ஆனால் சில வினாடிகளுக்குப் பிறகு, படத்தில் மறைந்திருக்கும் வார்த்தைகளை நீங்கள் அடையாளம் காண முடியும். இந்த பிரெயின் டீசரைக் கண்டறிவது மூளை வளர்ச்சிக்கும் நல்லது என்பதால், 9 விநாடிகளுக்குள் 6 வார்த்தைகளை தேட ஆரம்பியுங்கள்.... இந்த தந்திரமான புதிரைக் கண்டுபிடிக்க உங்களுக்கு கூர்மையான பார்வையும், அதிகவேகமாக செயல்படும் மூளையும் தேவை. கொடுக்கப்பட்ட 9 விநாடிகளுக்குள் எவ்வளவு முயன்றும் விடையை கண்டுப்பிடிக்க முடியாதவர்களுக்காக நாங்களே இங்கு விடையைக் கொடுத்துள்ளோம்.

Also Read : இந்த படத்திற்குள் மறைந்திருக்கும் நாயின் ஓனரை 15 விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

புதிருக்கான விடைகள்:

1. முதல் வார்த்தை BOOK - படத்தில் கண்ணாடி அணிந்திருக்கும் அந்த நபரின் முகத்தை உற்றுப்பார்த்தால் 'BOOK' (புக்) என்ற வார்த்தை இருப்பதை காணலாம்.

2. இரண்டாவதாக ‘Novel' (நாவல்) என்ற வார்த்தை குடும்பத் தலைவர் அமர்ந்துள்ள சோபாவின் இடதுபுறத்தில் மறைந்துள்ளது.

3. மூன்றாவதாக 'Story' என்ற வார்த்தை படத்தில் உள்ள பெண்மணி தலைமுடியில் 'S' என்ற வார்த்தையும், டீ ஷர்ட்டில் 'T' என்ற டிசைனும் கையில் உள்ள புத்தகத்தில் 'O' மற்றும் 'R' என்ற வார்த்தைகளும், கால் வளைவில் 'Y' என்பதும் உள்ளது.

4. நான்காவது புதிரான 'Words' (வார்த்தைகள்) என்பது படத்தில் உள்ள செடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



5. 'Page' (பக்கம்) சோபாவில் படுத்திருக்கும் சிறுவனின் கால்சட்டை மற்றும் டீஷர்ட்டை உற்றுப்பார்த்தால் அதில் பக்கம் என்பதை குறிக்கும் Page என்ற ஆங்கில வார்த்தை இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

6. நாயின் கண், காது மற்றும் சிறுமியின் தலைமுடியை உற்றுப்பார்த்தால் 'Read' என்ற வார்த்தை மறைத்திருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி